அடிபட்டும் அடங்காத அஜித்!.. மாட்டிக்கொண்டு முழிக்கும் மகிழ் திருமேனி.. நடப்பது இதுதான்!…

Published on: August 3, 2023
ajith
---Advertisement---

அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. ஏற்கனவே 2 வருடங்கள் வலிமை அப்டேட் கேட்டு ஓய்ந்து போன அஜித் ரசிகர்கள் விடாமுயற்சிக்கு எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதி காத்து வருகின்றனர். காரணம் அவர்களும் பழகிவிட்டார்கள்.

துணிவு படம் வெளியாகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் அஜித்தின் அடுத்த படம் இதுவரை துவங்கப்படவில்லை. இந்த இடைவெளியில் அஜித்தின் போட்டி நடிகராக கருதப்படும் விஜயோ லியோ படத்தில் நடித்தே முடித்துவிட்டு தற்போது அடுத்த படத்திற்கு அவர் தயாராகி வருகிறார். ஆனால், விடாமுயற்சி திரைப்படம் கிணத்தில் போட்ட கல்லாக கிடக்கிறது. ஒருபக்கம் அஜித் பைக்கை எடுத்துக்கொண்டு ஜாலியாக உலகத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

ajith

ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு வரை படப்பிடிப்பு துவங்கும் தேதி என பல செய்திகள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும் நடிக்கவில்லை. இப்போது கூட செப்டம்பர் 5ம் தேதி படப்பிடிப்பு துவங்கி 100 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதுவும் நடக்குமா இல்லை தள்ளி போகுமா என்பது அஜித்தின் கையில்தான் இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் யாருன்னு தெரியுமா?.. ரஜினி சொன்ன கதைக்கு அப்பவே பதில் சொன்ன உலக நாயகன்..

இதற்கிடையில் இத்தனை மாதங்கள் படப்பிடிப்பு நடக்காமல் போனதற்கான காரணம் தெரியவந்துள்ளது. மகிழ் திருமேனி ஒரு கதையை உருவாக்கி அஜித்திடம் சொல்லபோக, அஜித்தோ ஒரு ஆங்கில படத்தின் ஒரு வரி கதையை சொல்லி ‘இதை டெவல்ப் பண்ணுங்க’ என சொல்லிவிட்டாராம். மறைந்த இயக்குனர் மகேந்திரனின் மகன் மற்றும் சச்சின் பட இயக்குனர் ஜானிடம் அந்த ஒரு வரியை சொல்லி கதையை தயார் பண்ன சொல்லியிருக்கிறார்கள். அவரும் உருவாக்கி கொடுத்துவிட்டார்.

ajith
ajith

ஆனால், அந்த கதை மகிழ் திருமேனிக்கு பிடிக்கவில்லை. அதன்பின் ஒரு கொரியன் படத்தை சுட்டு அதிலிருந்து கதையை உருவாக்க துவங்க அதுவும் செட் ஆகவில்லை. இப்போது மகிழ் திருமேனியே புதிதாக ஒரு கதையை உருவாக்கியுள்ளாராம். இந்த கதையில்தான் அஜித் இப்போது நடிக்கவுள்ளார்.

விஸ்வாசம் பட கதையை சொல்ல சிறுத்தை சிவா சென்றபோது அஜித் ஒரு கதையை சொன்னார். அதை டெவலப் செய்துதான் விவேகம் படம் உருவானது. ஆனால், அந்த படம் படுதோல்வி அடைந்தது. அதன்பின்னர்தான் விஸ்வாசம் கதையில் அஜித் நடித்தார். ஆனாலும், அஜித் இன்னமும் மாறாமல் இயக்குனர்களிடம் ஒரு லைன் சொல்லி கதையை டெவலப் செய்ய சொல்வதை நிறுத்தவில்லை.

இதையும் படிங்க: மொத்த ப்ளானையும் மாற்றிய அஜித்!.. ஏக் தம்மில் சம்பவம் பண்ணப்போகும் ஏகே…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.