மீண்டும் மங்காத்தா அஜித்தை பார்க்க இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.!

அஜித் நடிப்பில் இன்று வலிமை திரைப்படம் பிரமாண்டமாக உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ளது. அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தற்போது முதல் ஷோ பார்த்து முடித்து ரசிகர்கள் தங்கள் ஆஸ்தான நடிகரை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். பலர் டிக்கெட் எடுத்து திரையரங்கிற்கு செல்ல ஆர்வமாக இருக்கின்றனர்.
இப்படத்தை அடுத்து மீண்டும் அஜித் , H.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பே வந்துவிட்டது. இந்த படத்தில் வலிமை படம் போல அதிகப்படியான ஆக்சன் காட்சிகள் இருக்காதாம்.
மாறாக வினோத்தின் சதுரங்க வேட்டை படம் போன்று, அழுத்தமான காட்சிகள் சம்பந்தப்பட்டதாக இருக்குமாம். இந்த படத்தில் அஜித், மங்காத்தா படம் போன்று வில்லன் கதாபாத்திரம் போன்ற வேடத்தில் தான நடிக்க உள்ளாராம்.
இதையும் படியுங்களேன் - வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்ட தியேட்டர்காரர்கள்.! வலிமை 1000 தியேட்டர்களில்…
அதனை உறுதிப்படுத்தும் வகையில் AK61 அறிவிப்பு வெளியான போஸ்டரில் கூட அஜித்தின் முகம் நெகட்டிவ் படமாக தான் காண்பிக்கப்பட்டது. இது தான் வினோத் அஜித்திற்கு நேர்கொண்ட பார்வை படத்திற்க்கு முன்பே சொன்ன கதை என கூறப்படுகிறது.
இந்த படத்தை மார்ச் மதம் தொடங்கி ஷூட்டிங் நடத்தி 2023 பொங்கலுக்கு தான் இந்த படத்தை களமிறக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். 2019 விஸ்வாசம் பொங்கல், இந்த வருடம் கொஞ்சம் லேட்டாக வந்தாலும் வலிமை பொங்கல் தான். அடுத்த வரும் AK61 பொங்கல் தான் போல.