
Cinema News
எனக்கு சம்பளம் தர அளவுக்கெல்லாம் பாலிவுட் வொர்த் இல்லை.. மகேஷ் பாபு பேச்சுக்கு போனி கபூர் என்ன சொன்னார் தெரியுமா?
எனக்கு சம்பளம் தர அளவுக்கெல்லாம் பாலிவுட் வொர்த் இல்லை.. மகேஷ் பாபு பேச்சுக்கு போனி கபூர் என்ன சொன்னார் தெரியுமா?
பாலிவுட்டில் நடிக்க மாட்டேன் என்றும் தனக்கான சம்பளத்தை பாலிவுட்டால் வழங்க இயலாது என நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் பேசியது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஏற்கனவே தென்னிந்திய சினிமாவுக்கும் இந்தி சினிமாவுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு நடைபெற்று வரும் நிலையில், மகேஷ் பாபு இப்படியொரு விளாசு விளாசுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
தெலுங்கில் ஒரு படத்துக்கு 80 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர் மகேஷ் பாபு தனக்கு இங்கேயே ஸ்டார்டாம் உள்ளது என்றும் டோலிவுட் படங்களில் நடிப்பது தான் தனக்கு பிடித்திருக்கிறது என்றும் இதுவரை பல பாலிவுட் பட வாய்ப்புகள் தன்னைத் தேடி வந்த நிலையில், அதில் எல்லாம் தனக்கு நடிக்க விருப்பமில்லை என கூறி திருப்பி அனுப்பிவிடேன் என பேசி பரபரப்பை கிளப்பினார்.
சவுத் இந்தியா பிரின்ஸ் என்றும் டோலிவுட் சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கப்படும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் ஒருவர் இப்படி பாலிவுட்டை எந்தளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தி விட்டாரே என பாலிவுட் பிரபலங்கள் குமுறி வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரிடம் பத்திரிகையாளர்கள் சிலர் மைக்கை நீட்ட, நான் பாலிவுட் தயாரிப்பாளர் மட்டும் இல்லைங்க, கோலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் படங்களை தயாரித்து வருகிறேன். மேலும், கூடிய சீக்கிரமே மலையாளம் மற்றும் கன்னடத்திலும் படம் பண்ணப் போறேன். இந்த கேள்வியை என்னிடம் கேட்காதீங்க என்று எஸ்கேப் ஆகி உள்ளார். மேலும், அவரை விடா பிடியாக இது பற்றி கேட்ட நிலையில், மகேஷ் பாபு அப்படி சொல்லி இருந்தால் அதற்கு அவரிடத்தில் சரியான காரணம் இருக்கும்.
யாருக்குமே அவர்களுடைய கருத்தை வெளிப்படுத்த முழு சுதந்திரம் உள்ளது. அவரது நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார். இதனால், அவர் பாலிவுட் பற்றி தவறாக பேசி விட்டார் என சித்தரிக்க வேண்டாம். அந்த அந்த மாநில நடிகர்களுக்கு அந்த அந்த மாநில ரசிகர்கள் தான் முதலில் முக்கியம் என்பதால் மகேஷ் பாபு அப்படி பேசியிருப்பார் என நைஸாக நழுவியுள்ளார் நம்ம வலிமை படத் தயாரிப்பாளர். பொழப்புக்கு வேட்டு வச்சிடுவாங்க போலன்னு அவர் மைண்ட் வாய்ஸ் பேசியது சத்தமாகவே கேட்டுள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.