பேர கொடுத்தவரை மரியாதையாக நடத்திய அஜித்...! ஏகே-61ல் இணையப் போகும் அந்த நடிகர்...!
’தல’ அஜித் என ரசிகர்கள் கொண்டாடிய காரணத்தின் பின்னாடி ஒரு கதையே இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். ஆம் முதன்முதலில் அஜித் தீனா படத்தின் மூலம் தான் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அந்த படத்தில் அஜித்துடன் ஒரு கேங் எப்பொழுதும் சுற்றிக் கொண்டே இருக்கும். அந்த கூட்டத்தில் ஒருவர் தான் மகாநதி சங்கர். இவர் தான் அந்த படத்தில் முதன் முதலில் அஜித்தை தல என்று அழைத்தார்.
அதிலிருந்து தான் ரசிகர்கள் அஜித்தை கொண்டாட தொடங்கினார்கள். அந்த மகாநதி சங்கர் தான் சுமார் 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித் கூட்டணியில் இணையப் போகிறார். எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஏகே-61. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மகாநதி சங்கர் நடிக்கிறார்.
இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் இவரை தெரியாத சிலபேருக்கு அஜித் மகாநதி சங்கரை “ இவர்தான் என்னை முதன் முதலில் தல என்ற பெயர் வைத்து அழைத்தது” என சொல்லி அறிமுகப்படுத்தினாராம். இனி யாரும் என்னை தல என்று அழைக்க வேண்டாம் எனக் கூறிய அஜித் இப்பொழுது இந்த நிகழ்வை பகிர்ந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்ததாம்.
மேலும் மகாநதி சங்கர் தீனா படத்திற்கு பிறகு ரெட், ஆஞ்சநேயா போன்ற படங்களில் அஜித் கூட சேர்ந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த படக்குழுவினர் பழசை மறக்கலப்பா அஜித் என புகழ்ந்து வருகிறார்களாம்.