H.வினோத்தின் அடுத்த ட்விஸ்ட்...! AK - 61 ல் இணையப்போகும் கே.ஜி.எஃப் பட நடிகர்..
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தின் சூட்டிங் பரபரப்பாக போய்க் கொண்டிருக்க இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை பற்றிய தகவல் அவ்வப்போது வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அண்மையில் அஜித்திற்கு ஜோடியாக மலையாள நடிகையுமான தமிழில் தனுஷுடன் அசுரன் படத்தில் ஜோடி சேர்ந்த மஞ்சு வாரியார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதை அவரும் ஒப்புக் கொண்டார்.
அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது அவர் தமிழில் நடிக்கும் இரண்டாவது படமாகும். இந்த படத்தில் அஜித் இரண்டு ரோலில் நடிப்பதாக தகவல் வந்தது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த படம் ஒரு வங்கி கொள்ளையை மையமாக வைத்து ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என படத்தரப்பிலிருந்து தகவல் வெளியானது.
இந்த படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடக்கிறது.அதற்காக சென்னை மௌண்ட் ரோடு மாதிரியான ஒரு செட்டை போட்டு படப்பிடிப்பை நடத்துகின்றனர் படக்குழு. இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு சர்ப்ரைஸை இயக்குனர் வைத்துள்ளார்.அதாவது சார்பட்டா படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு டஃப் கொடுத்த ஜான் கோக்கன் இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் ஏற்கெனவே அண்மையில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கே.ஜி.எஃப் -2 படத்தில் வில்லன் நடிகராக நடித்திருப்பார்.அதாவது நடிகர் சஞ்சய் தத்திற்கு வலது கையாக செயல்படுவார். இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க கூடியவர். இவரின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தி தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம்.