ஏகே 62 திரைப்படத்தை அவரும் இயக்கவில்லையாம்!.. அப்போ யார் இயக்குனர்னு தெரியுமா?..
“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் “ஏகே 62” திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளார் என செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. ஆனால் “ஏகே 62” திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதில்லை எனவும் விஷ்ணு வர்தன்தான் இயக்கவுள்ளதாகவும் யாரும் எதிர்பார்த்திராத ஒரு தகவல் வெளிவந்தது.
இந்த நிலையில் தற்போது “ஏகே 62” திரைப்படத்தை குறித்த மற்றுமொரு சூடான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது “ஏகே 62” திரைப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று தெரியவந்துள்ளதாம். மேலும் “ஏகே 62” திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.
இவ்வாறுதான் நேற்று இணையத்தில் “ஏகே 63” திரைப்படத்தை அட்லி இயக்கவுள்ளார் எனவும் அத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் எனவும் ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால் அத்தகவல் ரசிகர்களால் பரப்பப்பட்ட வதந்தி என தெரிய வந்தது.
இதையும் படிங்க: மதியம் படமாக்கவேண்டிய பாடலுக்கு காலையில் ரெக்கார்டிங் செய்த எம்.எஸ்.வி… வேற லெவல்!!
இந்த நிலையில்தான் தற்போது “ஏகே 62” திரைப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்குவதாக வெளிவந்த செய்தி வதந்தி எனவும் அத்திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் எனவும் தகவல் வருகிறது. எனினும் “ஏகே 62” திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற பிப்ரவரி மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.