இனி ஒன்னும் பண்ண முடியாது- கொரியன் படத்தை தூசி தட்டிய AK 62 படக்குழுவினர்… அடடா!
“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என தகவல் வெளிவந்தது. ஆனால் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்திற்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தால் விக்னேஷ் சிவன் “ஏகே 62” புராஜெக்ட்டில் இருந்து வெளிவந்துவிட்டார் என்று சில நாட்களுக்கு முன் செய்திகள் தெரிவித்தன.
இதனை தொடர்ந்து “ஏகே 62” திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கான திரைக்கதை பணிகளில் மகிழ் திருமேனி மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக பல செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் தற்போது “ஏகே 62” குறித்து ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், தனது வலைப்பேச்சு வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது மகிழ் திருமேனி, இத்திரைப்படத்திற்கான திரைக்கதை அமைப்பதில் பல நாட்களாக மும்முரமாக ஈடுபட்டாராம். ஆனால் திரைக்கதை சரியாக அமையவில்லையாம். ஆதலால் லைகா நிறுவனம் ஒரு பிரபல கொரியன் திரைப்படத்தை ரீமேக் செய்துவிடலாம் என முடிவு செய்து, ஒரு கொரியன் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியதாம்.
ஆனால் அதனை தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைக்கத் தொடங்கினால் வெகு நாட்கள் ஆகும் என மகிழ் திருமேனி கூறினாராம். ஆதலால் லைகா நிறுவனம் மீண்டும் அந்த பழைய கதையை திரைக்கதையாக அமைக்க தொடங்குமாறு கூறிவிட்டதாம். இவ்வாறு அந்தணன் தனது வலைப்பேச்சு வீடியோவில் தெரிவித்துள்ளார்.