குட் பேட் அக்லியில் விஜயின் டயலாக்கா? அதைவிட இன்னொரு சர்ப்ரைஸ் கோட்டில்… பரபர அப்டேட்!
GoodBadUgly: நடிகர் விஜய் மங்காத்தா டயலாக்கை கோட் திரைப்படத்தில் பேசியதே பரபரப்பாக கூறப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு மாஸ் அப்டேட் ஒன்றும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டில் விஜய் மற்றும் அஜித் இருவரும் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் ரசிகர்களுக்கு இடையே எப்போதும் சண்டை கொடிகட்டி பறக்கும். இருந்தும், ஒரு நடிகரின் படத்தில் இன்னொரு நடிகர் குறித்த சின்ன சீன் இடம்பெற்றால் கூட அந்த காட்சி பெரிய அளவில் வைரலாகும்.
இதையும் படிங்க: ஒரு கோடி தேடி வந்தும் உதறித் தள்ளிய அஜித்… ரசிகர்கள் மேல் எவ்வளவு அன்பு?!
சில வருடங்கள் முன்னர் அஜித் மற்றும் விஜய் இருவரின் படங்களிலுமே ஒருவரை இன்னொருவர் கலாய்த்து கொண்டு இருப்பார்கள். இதில் விஜய் மற்றும் அஜித்தின் இரண்டு ஹிட் பாடல்களும் அடங்கும். அந்த காலகட்டம் ரசிகர்களும் செம எண்டர்டெயின்மெண்ட்டாக இருந்தது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தின் டிரையிலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஒரு சீனில் விஜய் இனிமே குடிக்கவே கூடாதுப்பா என மங்காத்தா வசனத்தினை பேசி இருப்பார். இது வைரலாக பரவியது.
இதையும் படிங்க: ராமமூர்த்தி தவறினார்… கவலையில் பாண்டியன் குடும்பம்… ஓவரா போறீங்க விஜயா..
இந்நிலையில், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில், விஜயின் டாப்ஹிட் டயலாக் ஒன்றை அஜித்குமார் பேசி இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த காட்சியும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், கோட் திரைப்படத்தில் விஜய் மற்றும் அஜித் ஆச்சரிய மூவ்மெண்ட்டும் இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார். வரும் செப்டம்பர் 5ந் தேதி ரிலீஸாக இருக்கும் கோட் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கி இருக்கும் நிலையில் தொடர்ந்து கோட் ட்ரெண்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது.