மங்காத்தாவை மிஞ்சுகிற அளவுக்கு ஏதாச்சும் பண்ணுங்க வினோத் சார்.! வலுக்கும் கோரிக்கைகள்.!
H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் தற்போது நடித்து முடித்து ரிலீஸ் எப்போ என எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வலிமை. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் அது ரீ மேக் திரைப்படம் வலிமை திரைப்படம் தான் வினோத் அஜித்துக்காக எழுதிய கதைக்களம். அதனால், வலிமைக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இதனை அடுத்து மீண்டும் அஜித்திற்கு தான் வினோத் படம் இயக்குவது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது. இந்த வார ஞாயிற்று கிழமை பூஜை நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் பூஜை நடக்குமா என்பது சந்தேகமே.
அது இருக்கட்டும் , படத்தின் கதைக்களம் தான் தற்போதை ஹாட் டாப்பிக். அதாவது படத்தில் அஜித்திற்கு நெகட்டிவ் கதாபாத்திரமாம். மங்காத்தா படத்திற்கு பிறகு நீண்ட வருடங்களுக்கு பிற்காடு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்க இருக்கிறாராம்.
இதனை பார்த்த ரசிகர்கள், மங்காத்தா அளவிற்கு வருமா என தெரியவில்லை. ஆனால் அதனை விட சிறப்பாக வினோத் அஜித்திற்கு கதாபாத்திரம் வடிவமைத்து விடுவார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நம்பிக்கையை வீணாகிவிடாதீர்கள் வினோத்.