Connect with us

அஜித்தின் புதிய படத்துக்கு மீண்டும் ‘V’ தலைப்பா?.. பேசாம விஜய்னே வச்சிடுங்க!…

Cinema News

அஜித்தின் புதிய படத்துக்கு மீண்டும் ‘V’ தலைப்பா?.. பேசாம விஜய்னே வச்சிடுங்க!…

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள
நிலையில் ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கு பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தெரிகிறது.

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வலிமை திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் உறுதியாக தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்துள்ளார், கதாநாயகியாக காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி, வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தயாரித்த போனி கபூரே மீண்டும் அஜித் – எச்.வினோத் இணையும் படத்தையும் தயாரிக்கிறார். இதற்கிடையில், AK61 என்ற பெயரில் தயாராகும் அஜித்தின் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

அதன்படி, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அஜித்தின் AK61 பட பூஜை நடைபெரும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. ஆனால், ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் AK61 படத்தின் பூஜை நடைபெறுமா நடைபெறதா என்று தெரியவில்லை. ஒருவேளை பூஜை தொடங்கினால் படத்தின் தலைப்பு வெளியாகும் எனவும், பட தலைப்பு V-இல் தொடங்கும் என கூறப்படுகிறது.

ஏன்னென்றால் அஜித்தின் தற்போதைய பட தலைப்பு எல்லாமே V-யில் தொடங்கும் படி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி வீரத்தில் ஆரம்பித்து வேதாளம், விவேகம், இறுதியாக வலிமை என்பதால் ரசிகர்களே நீங்களே கண்டுபிடியுங்கள் பாப்போம் V-இல் தொடங்கும் அஜித்தின் புதிய பட தலைப்பு என்னவென்று.?!

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top