இன்னும் பேர் கூட வைக்கல.! அதுக்குள்ள இந்த அஜித் ஃபேன்ஸ் செய்யுற அட்டகாசத்த பாருங்க..,

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. இந்த திரைப்படம் ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருந்தாலும், அதனை மிஞ்சும் வகையில் சென்டிமெண்ட் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருந்ததால், படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு இருந்தது. இருந்தாலும் படம் ஓரளவு நல்ல வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இது அஜித்தின் 61வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்த படத்தின் ஹீரோயின் யார் என்று இதுவரை தெரியவில்லை. இந்த படத்திற்கு தலைப்பு கூட வைக்கவில்லை. ஒரே ஒரு புகைப்படம் மட்டும் வெளியானது. அதிலும் அஜித் முகம் முழுமையாக தெரியாது. வெரும் நெகட்டிவ் புகைப்படம் மட்டுமே வெளியாகி இருந்தது.
ஆனால், அந்த நெகட்டிவ் படத்தை வைத்து அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். தற்போதே படத்திற்கான பிரமோஷன்களை அவர்கள் ஆரம்பித்துவிட்டனர். அந்த நெகட்டிவ் அஜித் இருக்கும் புகைப்படத்தை டீ சர்ட்டில் போட்டு கொண்டு மொத்தமாக ஒரு இருபது நபர்கள் அஜித் ரசிகர்கள் நிற்கின்றனர்.
இதையும் படியுங்களேன் - என்ன தளபதி போன் பேசுறாரா.?! நக்கல் செய்த அஜித்.!
இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் மிகவும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு புகைப்படம் படத்தின் தலைப்பு என எதுவுமே தெரியாமல் அந்த படத்தை தற்போதே விளம்பரம் செய்ய அஜித் ரசிகர்கள் ஆரம்பித்து விட்டனர் என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர். தற்போதே இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.