இப்படி மாறிட்டாரே மனுஷன்!.. பைக் ஸ்பீடுக்கு மாறிய அஜித்!.. AK63 A to Z எல்லாம் பிளான் போட்டாச்சே!..

ஒரு படம் முடிந்தவுடனேயே அடுத்த படத்தை உடனே ஆரம்பிக்கும் பழக்கம் அஜித்துக்கு எப்போதும் இல்லை. பல மாதங்கள் இடைவெளி விடுவார். குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா போய்விடுவார். அல்லது பைக்கை எடுத்துகொண்டு உலகம் சுற்றப்போய்விடுவார். எதுவும் இல்லை எனில் துப்பாக்கி சுடும் போட்டு, ரிமோட் மூலம் ஹெலிகாப்டரை இயக்குவது என எதையாவது செய்து கொண்டிருப்பார்.

இதனால்தான் துணிவு படம் முடிந்து 10 மாதங்கள் கழித்தே விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் தனது பைக் பயணத்தை தொடர அஜித் திட்டமிட்டிருந்தார். ஆனால், விடாமுயற்சிக்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதியானது. இது அஜித்தின் 63வது திரைப்படமாகும். ஒருபக்கம், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பே திட்டமிட்டபடி நடைபெறவில்லை. சில காரணங்களால் இழுத்துக்கொண்டே போகிறது.

இதையும் படிங்க: 3 வருஷத்துக்கு ஒருமுறை பிரஸ்மீட் வைப்பேன்னு சொன்ன அஜித்!.. பல வருஷமா வைக்காதது ஏன்?..

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு துவங்கும் நாள், நடக்கும் இடம் என எல்லாம் முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பேங்காக் மற்றும் லண்டனில் நடைபெறவுள்ளதாம். இந்த மாதம் மார்ச் அல்லது ஏப்ரம் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

அஜித்துக்கு ஒரு ஃபுல் ஆக்‌ஷன் மற்று ஒரு பரிசோதனை முயற்சியாக இப்படம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது., இப்படத்தை பிரபல தெலுங்கு பட நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்திற்கு தேவி பிரசாத் இசையமைக்கவுள்ளார். இந்த மாதம் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது. எனவே தொடர்ந்து அஜித் படங்கள் தொடர்பான செய்திகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார். இது அவரின் 64வது திரைப்படமாகும். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதையும் படிங்க: உங்கள தேடிட்டு இருந்தோம்! ரசிகர் சொன்னதுக்கு சரியான தக் லைஃப் கொடுத்த அஜித்.. குசும்பு புடிச்ச தல

 

Related Articles

Next Story