தெலுங்கு சினிமா உலகில் முக்கிய நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவரை தெலுங்கு சினிமா ரசிகர்கள் பாலையா என அழைக்கிறார்கள். இவரின் நடிப்பில் போயாபட்டி ஸ்ரீனு இயக்கி 2001ம் வருடம் வெளியான திரைப்படம் அகாண்டா. வில்லன்களை துவம்சம் செய்யும் அகோரியாக இந்த படத்தில் அசத்தியிருந்தார் பாலையா.
இந்த படம் இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள பாலையா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அகண்டா 2 வெளியாகியிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் உலகமெங்கும் வெளியானது.
இந்த படத்தையும் போயாபட்டி சீனுவே இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஹர்சாலி மல்கோத்ரா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ஆதி இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் அதிக பன்சு வசனங்கள் மற்றும் வில்லன்களை பாலையா துவம்சம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. சில காட்சிகளை இமயமலையில் எடுத்திருந்தார்கள்.
இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 60 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. மூன்றாவது நாளான நேற்று மட்டும் இப்படம் 15 கோடி வசூல் செய்திருக்கிறது. இதில் வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால் கண்டிப்பாக இப்படம் 75 கோடி வசூலை தாண்டியிருக்கும் என கணிக்கப்படுகிறது.
