வேற படமா வெளிவந்த விஜயகாந்தின் ‘அக்கா புருஷன்’ - இதுக்கு பின்னாடி இவ்வளவு கதை இருக்கா?!..
Vijayakanth: திரையுலகை பொறுத்தவரை இயக்குனர் ஒரு கதையை உருவாக்குவார். இந்த கதையில் யார் நடித்தால் என்றால் சரியாக இருக்கும் என யோசித்து அந்த ஹீரோவிடம் சென்று கதை சொல்வார். அவரும் நடிக்க சம்மதித்தால் ஒரு தயாரிப்பாளரை பிடித்து அந்த கதை டேக் ஆப் ஆகும். அதாவது சினிமாவாக உருவாகும்.
ஒருவேளை அந்த கதை அந்த ஹீரோவுக்கு பிடிக்கவில்லை எனில் வேறு ஹீரோவுக்கு போகும். இது பல வருடங்களாக நடப்பதுதான். அதேபோல், ஒரு இயக்குனர் உருவாக்கிய கதையை வேறொரு இயக்குனர் படமாக எடுப்பது என்பது அரிதாகவே நடக்கும். ஏனெனில், கதையை யாரும் யாருக்கும் கொடுக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க: சரத்குமார் மீது செம கடுப்பில் இருந்த விஜயகாந்த்… கடைசில நடந்தது இதுதான்!..
இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் ஒரு அரசியல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதை ஒன்றை உருவாக்கினார். அந்த கதையை அவர் இயக்குனர் ஷங்கரிடம் சொல்ல இந்த கதையை நான் இயக்குகிறேன் என சொல்லிவிட்டு இப்போது ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படமாக எடுத்து வருகிறார்.
சரி விஷயத்திற்கு வருவோம். 1989ம் வருடம் கலைமணி என்கிற ஒருவர் இருந்தார். இவர் சில படங்களை தயாரித்துள்ளார். இவர் ஒரு கதையை எழுதினார். அதில், விஜயகாந்த் நடிப்பதாகவும், இசை இளையராஜாவும் எனவும் முடிவு செய்யப்பட்டு போஸ்டரோடு அறிவிப்பும் வெளியானது. கலைமணியே இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விஜயகாந்த் இறங்கி வருவார்.. விஜய் கார் கண்ணாடி ஏத்திட்டு போயிடுவார்!.. பத்திரிக்கையாளர் பேட்டி..
அந்த படத்திற்கு ‘அக்கா புருஷன்’ என தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. அதன்பின் அந்த கதையை மனோபாலா இயக்கினார். ஆனால், படத்திற்கு ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ என தலைப்பு மாற்றப்பட்டு விஜயகாந்த், சுஹாசினி, ரேகா ஆகியோர் நடித்தனர். 1989ம் வருடம் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
இப்படி சினிமாவில் பல கதைகள் ஒருவர் இயக்க துவங்கி பின்னர் அந்த கதை கைமாறி வேறு இயக்குனருக்கு சென்று திரைப்படமாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாள் முழுக்க மரத்து மேல உட்காந்திருந்த விஜயகாந்த்!. சண்டைன்னு வந்துட்டா அண்ணன் கில்லிதான்!..