Connect with us

நான் காண்டம் வாங்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? நடிகர் கமல்ஹாசன் மகள் அதிரடி…!

akshara haasan

Cinema News

நான் காண்டம் வாங்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை? நடிகர் கமல்ஹாசன் மகள் அதிரடி…!

கோலிவுட் சினிமாவில் உலக நாயகனாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர்கள் இருவருமே தற்போது தந்தையை போலவே படங்களில் நடித்து வருகிறார்கள்.

இதில் அக்ஷரா ஹாசன் தற்போது அறிமுக இயக்குனரான ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியானது. பெண்களின் பதின்பருவ ஆசைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

akshara haasan

akshara haasan

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அக்ஷரா ஹாசன் படம் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “இங்க பாலியல் உணர்வு அப்படின்னா பெண்கள் கன்ட்ரோல் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது முடியாது. நாங்களும் மனிதர்கள்தான்.

என்னால் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு தனியாக சென்று ஆணுறை வாங்க முடியும். ஆணுறை வாங்குறதுல தவறு ஒன்றுமில்லை. நீங்கள் பாதுகாப்பாக உடலுறவு செய்கிறீர்கள். ஒழுங்காக உடலுறவு நடக்கிறது. அதில் என்ன பிரச்னை” என்று கூறியுள்ளார்.

akshara haasan

akshara haasan

பிரபல நடிகரின் மகளான அக்ஷரா ஹாசன் உடலுறவு குறித்தும், காண்டம் குறித்தும் இவ்வளவு வெளிப்படையாக பேசியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top