அக்ஷய் குமாருக்கு இந்த முறையும் வசூலில் பலத்த அடி!.. அடுத்து சூர்யா படம் என்ன ஆகப்போகுதோ..

300 கோடி பட்ஜெட்டில் அக்ஷய் குமாரை எல்லாம் வைத்து இனிமேல் படம் எடுக்கலாமா? என பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஒருமுறைக்கு பல முறை யோசித்து படம் எடுத்தால் கடனில் கஷ்டப்படாமல் தப்பிக்கலாம் என்கின்றனர்.
ரகுல் பிரீத் சிங்கை திருமணம் செய்த ஜாக்கி பாக்னானியின் தந்தை வாசு பக்னானி தயாரிப்பில் வெளியான படம் தான் படே மியான் சோட்டே மியான். நம்ம ஊரில் சத்யராஜ் மற்றும் பிரபு நடித்து வெளியான சின்னதம்பி பெரியதம்பி என்கிற டைட்டிலை தான் இந்த படத்துக்கு வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: படம் டிராப்.. அவ்ளோதான்! எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வெற்றிமாறன்.. அவர்தான் காரணமா
அக்ஷய் குமார், டைகர் செராஃப் வில்லனாக பிருத்திவிராஜ் நடித்துள்ள இந்த படத்தை டேவிட் தவான் இயக்கி இருந்தார். 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக படம் எடுக்கிறேன் என ஃபைட்டர் படத்தை விட மோசமாக ஒரு குப்பை படத்தை எடுத்து அக்ஷய் குமார் தலையில் கட்டியுள்ளார்.
தொடர்ந்து பல படங்கள் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகி படுதோல்வி அடைந்து வரும் நிலையில் இந்த படமாவது அவருக்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 300 கோடி ரூபாயும் ஸ்வாஹா என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடடா மழைடா!.. தமன்னா எப்படி இருக்காரு பாருங்க!.. பையா 2 ஸ்டார்ட் பண்ற வழிய பாருங்க லிங்குசாமி!..
பிரம்மாண்ட ஆக்சன் காட்சிகள் அடங்கிய இந்த படம் நிச்சயம் இந்த ரம்ஜானுக்கு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாள் வசூல் வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே வந்திருப்பது ஒட்டு மொத்த படக்குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதல் வார முடிவில் அதிகபட்சமாக இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டுமா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனென்றால் முதல் நாளிலேயே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவில் குவிந்து விட்டன. இனிமேல் இந்த பேஷண்ட் பிழைப்பது கஷ்டம் என பாலிவுட் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்யின் ‘கோட்’ அப்டேட்டுக்கு போட்டியாக சூர்யா வெளியிட்ட கங்குவா மேட்டர்!.. அப்போ கிளாஷ் இருக்கா?..
அடுத்து சூர்யா தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் வெளியானால் சூர்யாவுக்கும் பட்டை நாமம் தான் கிடைக்குமா? என்றும் ரசிகர்கள் இப்பவே கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.