இதுவரை யாரும் செய்யாததை செய்து கின்னஸ் சாதனை படைத்த ரஜினி பட நடிகர்… புதுசு புதுசா யோசிக்கிறாங்களே!
மக்களை அசரவைக்கும் விதமாக பல வினோத செயல்களை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர்கள் பலரையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் ரஜினி படத்தின் வில்லன் நடிகர் ஒருவர், மிகவும் எளிதான ஆனால் வித்தியாசமான ஒரு முயற்சியை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அவர் அப்படி என்ன செய்தார் என்பது குறித்தும், அவர் யார் என்பது குறித்தும் இப்போது பார்க்கலாம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், எமி ஜாக்சன், ஆகியோரின் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் 2.0. இத்திரைப்படத்தில் பக்சி ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகரான அக்சய் குமார் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தில் இவர் தற்கொலை செய்துகொண்ட பிறகு அலைப்பேசி டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சில் இருந்து பறவைகளை பாதுகாக்க ஆராவாக மாறி ஒரு பயங்கர ராஜாளியாக உருவெடுப்பார். இதில் அக்சய் குமாரின் டெரரான நடிப்பை நாம் மறந்திருக்க முடியாது.
இந்த நிலையில் அக்சய் குமார் தற்போது ஹிந்தியில் “செல்ஃபி” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் மாஸ் ஹிட் அடித்த “டிரைவிங் லைசன்ஸ்” என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம். நாளை திரையரங்குகளில் “செல்ஃபீ” திரைப்படம் வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் புரோமோஷனுக்காக ஒரு புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் அக்சய் குமார். அதாவது இத்திரைப்படத்தின் புரோமோஷன் ஒன்றில் கலந்துகொண்ட அக்சய் குமார் தனது ரசிகர்கள் பலருடனும் வரிசையாக செல்ஃபி புகைப்படங்களை எடுத்துள்ளார்.
3 நிமிடங்களில் கிட்டத்தட்ட 184 பேர்களுடன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் அக்சய் குமார் இடம்பிடித்திருக்கிறார். தனது திரைப்படத்திற்கு புரோமோஷன் செய்தது மட்டுமல்லாமல் கின்னஸ் சாதனையும் படைத்து, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்திருக்கிறார் அக்சய் குமார்.
இதையும் படிங்க: ராஜ்கிரண் படத்தில் இளையராஜா செய்த அற்புதம்… என்னன்னு தெரிஞ்சா ஆடிப்போய்டுவீங்க!!