அக்‌ஷய் குமாருடன் மோதும் மாதவன்!.. ஜாலியன் வாலாபாக் கதையில் உருவான கேசரி சாப்டர் 2.. டிரைலர் எப்படி?

by Saranya M |   ( Updated:2025-04-03 06:46:02  )
அக்‌ஷய் குமாருடன் மோதும் மாதவன்!.. ஜாலியன் வாலாபாக் கதையில் உருவான கேசரி சாப்டர் 2.. டிரைலர் எப்படி?
X

#image_title

பாலிவுட்டில் தொடர்ந்து தேசப்பற்று படமாக நடித்து வரும் நடிகர் அக்‌ஷய் குமார் அதே ஜானரில் 2019ம் ஆண்டு அனுராக் சிங் இயக்கத்தில் வெளியான கேசரி திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்போது கேசரி படத்தின் பார்ட் 2 தயாராகி வரும் நிலையில் அப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அக்‌ஷய் குமார் 1991ம் ஆண்டு சவுகந்த் திரைப்படம் மூலம் தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். அதை தொடர்ந்து தட்கன், அந்தாஸ், பெரி, பூல் புலையா, அஞ்னபீ, கரம் மசாலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

கேசரி 2ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை வழக்கை எடுத்து நடத்திய வழக்கறிஞரின் கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கரன்சிங் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் அக்‌ஷய் குமார் நியாத்திற்கு போராடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதாடுவதற்கு நடிகர் மாதவன் ஆஜராகிறார். அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மாதவன் நெகட்டிவ் ரோலில் தன் அசுரத்தனமான நடிப்பில் கலக்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அக்‌ஷய் குமார் மற்றும் மாதவன் நடிப்பில் வெளியாக உள்ள கேசரி சாப்டர் 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் அவர்கள் இருவரின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த படம் ஏப்ரல் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Next Story