நெப்போலியன் மகன் தனுஷுக்கு மனைவி கொடுத்த முதல் பரிசு!… செம லவ்வா இருக்கே!…

Published on: November 12, 2024
---Advertisement---

நெப்போலியன் மகன் தனுஷுக்கு அவரது மனைவி அக்ஷயா கொடுத்த முதல் பரிசு கொடுத்து பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.

நெப்போலியன் மகன்: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்த நெப்போலியன் தனது மகன் தனுசுக்காக சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார். இவரின் மூத்த மகன் தனுஷுக்கு சிறுவயதில் இருந்தே தசை சிதைவு நோய் பாதிப்பு இருந்துள்ளது. 10 வயதுக்கு மேல் தனுஷ் எழுந்து நடக்க மாட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டார்கள்.

இதையும் படிங்க: Kanguva: ஒரே ஒரு போன் கால்!.. கங்குவா சிறப்பு காட்சிக்கு பர்மிஷன் வாங்கிய சூர்யா!.. செம மேட்டரு!..

அமெரிக்காவில் செட்டில்: இதனால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார் நெப்போலியன். அங்கு சென்று தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், அவரின் பாதிப்புக்கு தற்போது வரை மருந்தே இல்லை என்பதுதான் உண்மை. இருப்பினும் தனது மகனை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்கு அமெரிக்கா தான் சரியான இடமாக இருக்கும் என்று முடிவு செய்து அங்கேயே சாப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கி செட்டில் ஆகிவிட்டார்.

தனுஷின் திருமணம்: நெப்போலியன் தனது மகனின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அவர் கேட்கும் எந்த விஷயத்தையும் இல்லை என்று சொல்லாமல் செய்து வருகின்றார். தனுசுக்கு திருமண வயதில் நெருங்கிய காரணத்தால் ஒரு வருடமாக பெண் பார்க்கும் படலத்தை தொடங்கியிருந்தார்கள். அதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவரை நிச்சயதார்த்தம் செய்திருந்தார்கள்.

பிரம்மாண்ட திருமணம்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிகப் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்று முடிந்தது. தமிழ் கலாச்சார முறைப்படி ஜப்பானில் இருப்பவர்களே வியந்து பார்க்கும் அளவிற்கு மகன் திருமணத்தை மிக விமர்சையாக செய்திருந்தார் நெப்போலியன். மேலும் தமிழ் சினிமாவில் இருந்து ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

பேட்டி: திருமணத்திற்கு பிறகு நடிகர் நெப்போலியனும், அவரது மனைவி சுதாவும் இன்று திருமணம் குறித்தும் தனது மகனின் ஆசைகள் குறித்தும் பல விஷயங்களை எமோஷனலாக பகிர்ந்து இருந்தார்கள். அதேபோல தனுஷும் அவரது மனைவி அக்ஷயாவும் திருமணத்திற்கு பிறகு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருந்தார்கள். அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்கள்.

இதையும் படிங்க: Dhanush: எடுத்தே தீருவேன்னு அடம் பிடிக்கும் தனுஷ்?!… இளையராஜாவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் இயக்குனர்!…

அக்ஷயாவின் முதல் பரிசு:  முதல் சந்திப்பு, முதல் ஃபோன் கால் அனைத்து விஷயங்களையும் அந்த பேட்டியில் மனம் விட்டு பேசி இருந்தார்கள். இந்நிலையில் நெப்போலியன் மகன் தனுஷுக்கு அவரின் மனைவி அக்ஷயா முதலில் வழங்கிய பரிசு குறித்து பேசியிருந்தார். அதில் பேசிய அக்ஷயா கூறியிருந்ததாவது ‘நான் ஓவியம் நன்றாக வரைவேன். இதனால் தனுஷுக்கு அவரின் உருவத்தை ஓவியமாக வரைந்து முதல் கிப்டாக நான் கொடுத்தேன். எங்களுடைய முதல் கிஃப்ட் அதுதான்’ என்று மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.