பாரதிராஜா பாலச்சந்தரால் சினிமாவிற்குள் வந்த இயக்குனர்… முதல் படமே மாஸ் ஹிட்.. இவ்வளவு நாளா தெரியவே இல்லையே?

Published on: May 19, 2023
---Advertisement---

தமிழ் சினிமாவிற்குள் எவ்வளவோ இயக்குனர்கள் வருவதுண்டு. ஆனால் அனைத்து இயக்குனர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைத்துவிடுவதில்லை. சில இயக்குனர்கள் நல்ல வெற்றி படம் கொடுத்தும் கூட சினிமாவில் பெரிதாக அறியப்படுவதில்லை.

அப்படி தமிழ் சினிமாவில் வந்து முதல் படத்திலேயே நல்ல வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் அழகம் பெருமாள். அழகம் பெருமாள் சினிமாவிற்குள் வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதையாகும். திரைத்துறைக்கு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்னும் கனவோடு பள்ளி படிப்பை முடித்ததுமே கிளம்பி வந்தவர் அழகம் பெருமாள்.

ஆனால் இசையமைப்பாளராவது கடினம் என அறிந்தவர் மீண்டும் கல்லூரி முடித்துவிட்டு வந்து அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இயக்குனராவதற்காக சேர்ந்தார். அவரிடம் இயக்குனர் ஆவதற்கான திறமைகள் இருந்தன. அங்கு படித்து முடித்தவுடன் அனைவரும் ஒரு குறும்படம் எடுக்க வேண்டும்.

அதில் தேர்வாகுபவர்களுக்கு தங்க பதக்கம் வழங்குவார்கள். அப்படி தங்கப்பதக்கம் வென்றவர்களால் திரைத்துறையில் எளிதாக வாய்ப்பை பெற முடியும். எனவே பிரிவோம் சந்திப்போம் என்கிற குறும்படத்தை எடுக்கிறார் அழகம் பெருமாள்.

வாய்ப்பை பெற்ற இயக்குனர்:

அதனையடுத்து சிறந்த குறும்படத்தை தேந்தெடுக்க இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தர் இருவருமே வருகின்றனர். அவர்கள் இருவருக்குமே இந்த பிரிவோம் சந்திப்போம் படத்தை மிகவும் பிடித்துவிட அழகம் பெருமாளுக்கு தங்க பதக்கத்தை கொடுக்கின்றனர்.

சினிமாவில் உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என பாராட்டியுள்ளனர். அதனையடுத்து அழகம் பெருமாள் சினிமாவில் இயக்கிய முதல் திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியான டும் டும் டும். இந்த படத்தில் ஜோதிகாவும் மாதவனும் நடித்திருந்தனர். அப்போது பெரும் ஹிட் கொடுத்த படங்களில் அதுவும் ஒன்று.

அதன் பிறகு அழகம் பெருமாள் உதயா, ஜூட் ஆகிய படங்களை இயக்கினார். இருந்தாலும் அதிக மக்கள் மத்தியில் பிரபலமடையாத ஒரு இயக்குனராகவே அழகம் பெருமாள் இருந்துள்ளார்.

இதையும் படிங்க: நாசருக்கும் ரஜினிக்கும் இடையில் எழுந்த பிரச்சினை!.. கமலுடன் நெருக்கம் காட்டுவதற்கு இதுதான் காரணமா?

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.