கார்த்திக் ஹீரோவாக நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது பாவா லட்சுமணனா? இது என்ன புதுசா இருக்கு?

Actor Karthick: தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்ற அடைமொழியுடன் இன்று வரை மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமான தொடர்ந்து பல படங்களில் நடித்து 80கள் காலத்தில் ஒரு முன்னனி ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார்.

இவருடைய அந்த சினிமா அறிமுகம் என்பது மிகவும் வித்தியாசமானது. அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்திற்காக ஹீரோவை தேடிக்கொண்டிருக்கும் போது போகும் வழியில் கண்ணில் பட்டவர் தான் கார்த்திக். பாரதிராஜா காரில் வந்து கொண்டிருந்த போது அவருடைய காரில் பந்து வந்து விழ அது வீட்டில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த கார்த்திக் அடித்த பந்து. அப்போது கார்த்திகை பார்த்த பாரதிராஜா யார் இந்த பையன் எனக்கேட்டபோது முத்துராமன் உடைய மகன் என்று தெரிந்ததும் இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் பாரதிராஜா .

இதையும் படிங்க: அதை மட்டும் கரெக்டா சொன்னா எந்தப் படமும் ஹிட் தான்…! வெற்றிப்பட இயக்குனர் சொல்லும் சீக்ரெட்

இப்படித்தான் கார்த்திக் அறிமுகமானார். ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தவர் நடிகர் பாவா லட்சுமணன் என்பதை எத்தனை பேருக்கு தெரியும் .சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பாவா லட்சுமணன் இந்த செய்தியை கூறியிருக்கிறார். சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு வந்த பாவா லட்சுமணன் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு நடிகர்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் ஆடிஷனுக்காக பாரதிராஜா அலுவலகத்திற்கு சென்றாராம் பாபா லட்சுமணன்.

அப்போது வரிசை கட்டி பல இளைஞர்கள் நின்று கொண்டிருக்க மூன்றாவது ஆளாக பாவா லட்சுமணன் நின்றிருக்கிறார். அவருக்கு அடுத்து ஆறாவது நபராக நடிகர் முரளியும் நின்று கொண்டிருந்தாராம். பாரதிராஜா வந்ததம் பாவா லட்சுமணனை பார்த்திருக்கிறார். பார்ப்பதற்கு ஐயர் வீட்டு பையன் போல நன்றாகத்தான் இருக்கிறாய்.

இதையும் படிங்க: வாரிசு நடிகரா இருந்தாலும் விஜய் பண்ண தப்ப நான் பண்ணல.. என்ன சொல்றாரு அருண்விஜய்?

இருந்தாலும் ஒரு மூன்று நாட்கள் காத்திரு .நான் சொல்லி அனுப்புகிறேன் என அனுப்பிவிட்டாராம். இந்த இடைப்பட்ட நாட்களில் தான் அவர் கண்ணில் கார்த்தி தென்பட உடனே கார்த்திக்கை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்து இருக்கிறார். இல்லை என்றால் பாவா லட்சுமணன் தான் அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியவர் என அந்த பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.

 

Related Articles

Next Story