கார் விபத்தால் கதாநாயகனான கார்த்திக்... வாய்ப்பு கிடைத்த சுவாரஸ்ய பின்னணி...
தமிழ்த் திரையுலகத்தில் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தால் கார்த்திக் என்ற நாயகன் அறிமுகமானார். ஆனால், அவரை எப்படி தேர்ந்தெடுத்தார்கள் என்பது தான் ஆச்சரியமே. இயக்குனர் பாரதிராஜா இயக்கிய படம் அலைகள் ஓய்வதில்லை. இப்படம் அப்போதைய சமூகத்தின் முக்கிய கருத்தினை கூறியதால் பெரிய அளவிலான வெற்றியினை பெற்றது. தொடர்ந்து, வசூலில் சக்கைப்போடு போட்டது.
தன்னுடைய உதவி இயக்குநர் மணிவண்ணனின் கதைக்குத் திரைக்கதை வடிவம் கொடுத்து பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படத்தை எடுத்தார். பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக், நடிகை ராதா ஆகிய இருவரும் ஹீரோ, ஹீரோயினாக இந்தப் படம் மூலமாகத்தான் அறிமுகமானார்கள். அதேபோல், பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருந்த தியாகராஜனுக்கும் இந்தப் படம்தான் அறிமுகப்படம்.
இப்படி பல சிறப்புக்களை பெற்ற இப்படத்தில் கார்த்திக் முதலில் நாயகனாக தேர்வாகவில்லை. கதைகேற்ற நாயகனை பள்ளிகள், கல்லூரிகள், கடற்கரை என்று பல இடங்களில் தேடினர். படப்பிடிப்பு துவங்க இருந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆதர்ஷ் வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்த ஒரு பையனை கார்த்திக் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.
இதையும் படிங்க: உன்கூட ஊர் சுத்துவேன்..ஆனா நடிக்க மாட்டேன்!…நடிகையிடம் சீன் போட்ட கார்த்திக்…
இருந்தும் அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தார். அப்போது ஒரு இடத்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்த பாரதிராஜா விபத்தில் சிக்கி இருக்கிறார். அப்போது அடிப்பட்ட ஒரு பையனை அழைத்துக்கொண்டு போயஸ் தோட்டத்தின் அருகே ஒரு மருத்துவரிடம் சென்றுள்ளனர்.
அங்கு முத்துராமன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த கார்த்திக்கினை பார்த்தது அப்படியே தனது கதையின் நாயகனை நேரில் பார்ப்பது போல இருப்பதாக எண்ணி இருக்கிறார். அப்போது முரளியாக இருந்த கார்த்திக்கிடம் பாரதிராஜா தனது தொலைப்பேசி எண்ணினை கொடுத்துவிட்டு முத்துராமனை வீட்டிற்க்கு வந்ததும் அழைக்க சொல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு அங்கிருந்து சென்று இருக்கிறார்.
வெகுநேர காத்திருப்பிற்கு பின்னர் முத்துராமன் அவர்களை அழைத்து வீட்டிற்கு வருமாறு கூறியிருக்கின்றார். பாரதிராஜா வந்த விஷயத்தினை தெரிவித்தார். மகனை நடிக்க வைக்க முத்துராமனும் அவர் மனைவியும் உடனே சம்மதம் தெரிவித்தனர். ஆனால் கார்த்திக் நீங்க படப்பிடிப்புனை பார்க்க வரக்கூடாது. அப்போ தான் நடிப்பேன் என முத்துராமனிடம் கூறினாராம். அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து கார்த்தி தனது முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன் பின்னர் உலகம் அறிந்ததே!