Categories: Cinema History Cinema News latest news

சார் இந்த காட்சி இப்படி எடுக்கக்கூடாது… மணிரத்னத்திற்கே பாடம் எடுத்த மாதவன்.. அடுத்து என்ன ஆனது?

தமிழ் சினிமாவின் விஸ்வாமித்திரர் மணிரத்னத்துக்கே தனது முதல் படத்தில் மாதவன் பாடம் எடுத்தாராம். பல போராட்டத்திற்கு பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தவர் நடிகர் மாதவன். 20களில் அலைபாயுதே படத்தின் மூலம் கோலிவுட்டின் நாயகனாக எண்ட்ரி கொடுத்தார். அவரின் முதல் இண்ட்ரோ சீனினை 22 வருடம் கழித்து இப்போ பார்த்தால் கூட பலரும் அவரிடம் கவரக்கூடும்.

மாதவன்

மிகப்பெரிய அளவில் பட்ஜெட் இல்லாமல் சாதாரண கதையை சொல்லிய விதத்தில் அப்ளாஸ் அள்ளியது. இப்படத்தில் மாதவன் அறிமுகமாக அவருக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார். இப்படம் நாசரின் வாழ்க்கை கதையினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது பல சுவாரஸ்யங்கள் நடந்ததாம். ஒருமுறை எவனோ ஒருவன் பாட்டு முடியும்போது மாதவனும் ஷாலினியும் மீட் பண்ணக்கூடிய சீன் ஷூட்டிங் நடந்ததாம். ரொம்ப நாள் அலைஞ்சி கண்டுப்பிடித்த காதலியை பார்க்கும் போது ஃபுல் எமோஷனலா கொடுங்க என கூறி இருக்கிறார்.

மாதவன் அவரிடம் சார் நான் இத்தனை ஹெவியா பீலிங்ஸை கொடுத்தால் கிளைமேக்ஸ் பீல் கொடுத்துவிடுமே. அதையே கிளைமேக்ஸ் செய்தால் ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா எனக் கேட்டு இருக்கிறார்.

மாதவன்

மணிரத்னம் உடனே பதில் சொல்லாமல் ஷூட்டிங்கில் இருந்து கிளம்பி விட்டாராம். ஆனால் இது படப்பிடிப்பினரை பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது மாதவனை மிகவும் பயப்படுத்தியதாம். என்ன ஆகுமோ என நினைத்தாராம். ஆனால் இரவு மணிரத்னத்திடம் இருந்து மாதவனுக்கு அழைப்பு வந்தது. நீங்க சொல்றது தான் சரி மாதவன். எமோஷனல் கம்மியாவே பண்ணிடுங்க என்றாராம்.

Published by
Akhilan