அலைபாயுதே படத்தை “ச்சீ” என்று சொன்ன ரசிகர்… அரண்டுப்போன பிரபல இயக்குனர்… ஆனா அதுக்கப்புறம்தான் டிவிஸ்ட்டே!!

Published on: January 15, 2023
Alaipayuthey
---Advertisement---

கடந்த 2000 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் மாதவன், ஷாலினி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “அலைபாயுதே”. இத்திரைப்படம் காலத்தை தாண்டியும் பேசப்படும் திரைப்படமாக திகழ்ந்தது. தற்கால தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் மிக நெருக்கமான திரைப்படமாக “அலைபாயுதே” அமைந்திருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் காலத்தை தாண்டியும் ரசிக்கும்படியாக அமைந்தது. “பச்சை நிறமே”, “சினேகிதனே”, “செப்டம்பர் மாதம்”, “காதல் சடுகுடு”, “எவனோ ஒருவன்” ஆகிய அனைத்து பாடல்களும் மாபெறும் ஹிட் அடித்தன.

Alaipayuthey
Alaipayuthey

“அலைபாயுதே” திரைப்படத்திற்குப் பிறகு காதலர்கள் பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்ளும் டிரெண்டு அதிகமாக உருவானதாக பல விமர்சனங்களும் எழுந்தன. அந்த அளவுக்கு அக்காலகட்டத்தில் காதலர்களிடையே பெரும் தாக்கத்தை உண்டு செய்த திரைப்படம் என்று கூட கூறலாம்.

“அலைபாயுதே” திரைப்படம் வெளியான முதல் நாளில் மாதவனும், அவரது நண்பரும் இயக்குனருமான ஜே.சுரேஷும், இத்திரைப்படத்திற்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக சென்னை உதயம் திரையரங்கத்திற்கு சென்றார்களாம்.

முதல் திரைப்படம் என்பதால் மாதவனுக்கு படபடப்பாக இருந்ததாம். ஆதலால் அவர் காரில் அமர்ந்திருக்க, இயக்குனர் சுரேஷ் திரையரங்கு வளாகத்திற்குள் சென்றாராம். அங்கே படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஒருவரிடம் “படம் எப்படி இருக்கு?” என கேட்க அந்த நபர் “ச்சீ” என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். சுரேஷுக்கு அதிர்ச்சியாகிவிட்டதாம். இதை எப்படி மாதவனிடம் சொல்வது என்ற தயக்கம் ஏற்பட்டதாம்.

Alaipayuthey
Alaipayuthey

அதன் பின் கார் இருக்கும் திசையை பார்த்து சென்ற சுரேஷ், கார் அருகே வந்ததும் எதுவுமே பேசாமல் நின்றுக்கொண்டிருந்தாராம். மாதவன் அவரை பார்த்து “டேய், உண்மையை சொல்லு, படம் பார்த்தவங்க எப்படி இருக்குன்னு சொன்னாங்க?” என சத்தியம் செய்ய சொன்னாராம். அதற்கு அவர் “நல்லா இல்லன்னு சொல்றாங்க” என்று உண்மையை கூறிவிட்டார்.

இதனை கேட்டதும் மாதவன் கண்கலங்கிவிட்டாராம். ஆனால் சுரேஷின் மனதில் “இந்த படம் மிகவும் அருமையான படமாச்சே. எப்படி நல்லா இல்லன்னு சொல்றாங்க” என சிந்தித்துக்கொண்டே இருந்தாராம். அதன் பின் மீண்டும் திரையரங்கின் வளாகத்திற்கு ஓடினார் சுரேஷ். அங்கே பல இளம்ஜோடிகள் அமர்ந்திருந்தார்கள்.

Alaipayuthey
Alaipayuthey

அவர்களில் ஒரு இளம் ஆணிடம் சென்று “படம் எப்படி இருக்கிறது?” என கேட்டாராம். அதற்கு அந்த ஆண், தனது காதலியை கைக்காட்ட, அந்த காதலி அழுதுகொண்டிருந்தாராம். “ஏன் அழுகுறீங்க?” என அவர் கேட்க, அந்த பெண் “இப்படி ஒரு படம் எடுக்கவே முடியாது, அவ்வளவு அருமையா இருந்தது” உணர்ச்சிவசப்பட்டு அழுதுகொண்டே கூறினாராம். இதனை கேட்ட சுரேஷுக்கு புல்லரித்துவிட்டதாம். அதன் பிறகு மாதவனிடம் ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்து “நீ ஜெயிச்சிட்ட மேடி” என கத்தினாராம்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.