Connect with us

Cinema History

ஒரு பாட்டுக்கு 20 நாட்கள் அலையவிட்ட கண்ணதாசன்… கடுப்பான பி.எஸ்.வீரப்பா.. கடைசியில் செம ட்விஸ்ட்டு..!

Kannadasan: தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்த பி.எஸ்.வீரப்பா தயாரிப்பாளராகவும் இருந்து இருக்கிறார். ஆனால் அவர் தன்னுடைய ஒரு படத்துக்காக கண்ணதாசனிடம் 20 நாட்கள் அலைந்து கடைசியில் உருவாகிய அந்த பாட்டு இன்றுமே ட்ரெண்டிங்கில் இருக்கிறதாம்.

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் முதல் அனைவருக்குமே வில்லன் நடிகராக இருந்தவர் தான் பி.எஸ்.வீரப்பா. நடிப்பில் மட்டுமல்லாமல் பல படங்களை தயாரித்தும் வந்தாராம். அந்த வகையில் இவர் தயாரித்து ரிலீஸான திரைப்படம் தான் ஆலயமணி. 

இதையும் படிங்க: ‘அடங்கொப்பன் தாமிரபரணில தலைமுழுக’ எத்தனை பேர் ரசிச்சிருக்கீங்க? எத வச்சு பேசுனார் தெரியுமா ஆனந்தராஜ்?

இப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜா தேவி, விஜயகுமாரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்து இருந்தனர். படத்தில் அனைத்து பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் தான் எழுதி இருந்தார்.

இப்படத்தில் ராஜேந்திரன், சரோஜா தேவியை காதலிப்பார். ஆனால் சரோஜா தேவிக்கு சிவாஜி மீது காதல் இருக்கும். இதனால் ராஜேந்திரன் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து விடுவார். இந்த காதல் சம்பவம் சிவாஜிக்கு தெரிந்த பின்னர் ராஜேந்திரனை கொலை செய்ய முயற்சி செய்வார். ஆனால் ராஜேந்திரன் சரோஜா தேவிக்கு சிவாஜி மீது தான் காதல் என்ற உண்மையை சொல்லுவார்.

இதனால் சிவாஜி மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வார். அப்போ அவரை மீனவர் கூட்டம் காப்பாற்றி விடும் அங்கு சிவாஜி பாட ஒரு பாட்டு தேவைப்படும். ஆனால் அப்போது கண்ணதாசன் அரசியலில் இருந்ததால் பாட்டை எழுதி கொடுக்காமல் அலையவிட்டுக்கிட்டே இருப்பார். அந்த ஒரு பாட்டால் படம் முடிக்காமல் இழுத்துக்கொண்டே இருக்கும். 

இதையும் படிங்க: புருஷனுக்கு போட்டியா பொண்டாட்டியா… அதுவும் அப்பா சப்போர்ட்டுல.. என்னம்மா ஐஸ்வர்யா நியாயமா..?

இது கண்ணதாசனுக்கு ஐடியா கிடைக்க நைட் பாட்டு வந்துவிடும் என்றாராம். அதைப்போலவே பாட்டு வந்தது. வாங்கி படித்தவருக்கு ஆச்சரியமாகி விட்டதாம். அவர் எதேர்ச்சையாக சொன்ன வார்த்தையை வைத்து சட்டி சுட்டதடா கை விட்டதடா என எழுதி கொடுத்தாராம். அந்த பாடல் இன்றளவிலும் மிகப்பெரிய ஹிட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top