
Cinema News
ஆளவிடுங்க சாமி.. இனி உங்க பக்கமே வரமாட்டேன்..! தெலுங்கு சினிமாவுக்கு குட் பை சொன்ன நடிகை…!
தென்னிந்திய நடிகைகள் பாலிவுட் படங்களில் நடிப்பதும், பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படங்களில் நடிப்பதும் வழக்கமான ஒன்று தான். பல நடிகைகள் இவ்வாறு நடித்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் புதிதாக பாலிவுட்டில் இருந்து தென்னிந்திய சினிமாவுக்கு வந்தவர் தான் நடிகை ஆலியா பட்.
இவர் சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் பெயருக்குதான் ஹீரோயின் ஒரு துணை நடிகைக்கு இருக்க வேண்டிய அளவுக்குக் கூட ஆலியாவின் கதாபாத்திரம் வெயிட்டாக இல்லை.
இதனால் மனம் நொந்துபோன ஆலியா ஆர்ஆர்ஆர் படம் சம்பந்தப்பட்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். மேலும் இயக்குனர் ராஜமெளலி மீது கூட கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தான் ஜுனியர் என்டிஆர் அடுத்ததாக நடிக்க உள்ள ஒரு புதிய படத்தில் ஆலியா பட் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் தற்போது திடீரென ஆலியா இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.
அதுமட்டுமல்ல இனி தெலுங்குப் படங்களில் நடிக்கும் எண்ணமே ஆலியாவிற்கு இல்லையாம். மேலும் சமீபத்தில் ஆலியா கதையின் நாயகியாக நடித்து ஹிந்தியில் வெளியான கங்குபாய் கத்தியவாடி படம் நல்ல வரவேற்பை பெற்றதால், இனி ஹிந்தியில் மட்டுமே நடிக்கலாம் என்ற எண்ணத்தில் ஆலியா இருப்பதாக கூறப்படுகிறது.