
Cinema News
இயக்குனர் செய்த வேலையால் இனி இந்த பக்கமே வரமாட்டேன் என ஓட்டம் பிடித்த பாலிவுட் நடிகை.!
ராஜமௌலி இயக்கத்தில் அண்மையில் வெளியாக தற்போது வசூலில் சக்கை போடு போட்டு வரும் திரைப்படம் RRR. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படமானது, சுதந்திரத்திற்கு முன்னர்ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய இரு வீரர்களை பற்றியது. அல்லூரி சீதாராம ராஜு, கொம்மாரம் பீம் ஆகியோர் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது.
இப்படத்தில் பாலிவுட் ஹீரோயின் ஆலியா பட்டிற்கு போதுமான காட்சிகள் இல்லையென்று அவர் தனது நெருங்கிய வட்டாரத்தில் வருத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் ஒரு படி மேலே போய் ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜமௌலியை அன்பாலோ செய்துவிட்டார் என்று கூறப்பட்டது.
இதையும் படியுங்களேன் – அந்த ஊர் பக்கமே ஏன்யா போறீங்க.?! சூப்பர் ஸ்டாருக்கு இந்த ஊருல ஹீரோயின் கிடைக்காதா.?
ஆனால் அதன் பின்னர் தான் அவர் அப்படி செய்யவில்லை என ரசிகர்களுக்கு புரிந்தது. இருந்தாலும் , ராஜமௌலி செய்த செயலால் ( ஆனால் அவர் கதைக்கு எது தேவையோ அதனைத்தான் செய்தார்) இனி தெலுங்கு படத்தில் நடிக்க மாட்டேன் என முடிவ்வெடுத்துள்ளாராம்.
ஜூனியர் என்டிஆரின் 30வது திரைப்படத்தில் நடிக்க ஆலியா பாட்டிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதற்கு ஆலியா பட் என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.