ஆர்.ஆர்.ஆர் படத்துல வெறும் 20 நிமிஷம்...ஆனா இத்தன கோடி சம்பளமா?...

by சிவா |   ( Updated:2022-01-12 06:21:06  )
alia bhat
X

பாகுபலிக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலியை போலவே அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

RRR movie

RRR movie

மேலும், தமிழ் நடிகர் சமுத்திரக்னி, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் என பலரும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை கடந்த 7ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், தேதி குறிப்பிடாமல் பட ரிலீஸ் தள்ளி சென்றுள்ளது.

rrr

இப்படத்தில் ஆலியா பட் வரும் காட்சி வெறும் 20 நிமிடம் மட்டும்தானாம். ஆனால், அதற்கு அவருக்கு ரூ.9 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாம். அதேபோல்,அஜய் தேவ்கனுக்கு ரூ.35 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.

பெரிய பட்ஜெட் படம் என்பதால் பெரிய சம்பளம் போல!..

Next Story