பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? பிரபல நடிகையை கழுவி ஊற்றும் ரசிகர்கள்....
நடிகர் மற்றும் நடிகைகள் படங்கள் தவிர விளம்பர படங்களில் நடிப்பது வழக்கமான ஒன்று தான். பலர் இதுபோன்ற விளம்பரங்களை தவிர்த்து வரும் நிலையில், சிலர் மட்டும் குளிர்பானம் உள்ளிட்ட விளம்பரங்களில் நடித்து வருகிறார்கள்.
இதுபோன்ற விளம்பரங்களால் சில நடிகர்கள் பிரச்சனைகளில் சிக்கிய கதையும் உண்டு. அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் தேவையில்லாத சிக்கலில் சிக்கி ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார்.
அந்த நடிகை வேறு யாருமல்ல நடிகை ஆலியா பட் தான். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதன் மூலம் நல்ல பிரபலமான ஆலியா பட் சமீபத்தில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்திருந்தார்.
இந்த விளம்பரம் தான் தற்போது வினையாக மாறியுள்ளது. ஆம் அந்த விளம்பரத்தில் சர்க்கரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என ஆலியா பட் கூறியுள்ளார். இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம் முன்னதாக ஆலியாபட் நடித்த கலங்க் என்ற படத்தின் நிகழ்ச்சியில் பேசிய ஆலியா பட், "நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை. அது ஆரோக்கியமற்றது" என்று கூறியிருப்பார். தற்போது இந்த இரண்டு வீடியோக்களையும் பகிர்ந்து வரும் ரசிகர்கள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என்று அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.