புடவையில் ஜொலிக்கும் ஆலியா!! நம்மூர் நடிகைகள் பார்த்து கத்துகங்கப்பா...
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வருபவர் நடிகை ஆலியா பட். இவர் பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான மகேஷ் பட்டின் மகளாவார். குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் சில படங்களில் நடித்த இவர் பின்னர் 2014ல் ஹேவே என்ற படத்தின் மூலம் நடிகையானார்.
இதையடுத்து 2 ஸ்டேட் என்ற படத்தில் தமிழ் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். இப்படம் தமிழ் பெண்ணுக்கும், பஞ்சாபி பையனுக்கும் இடையேயான காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும். இதில் சென்னை பெண்ணாக தமிழ் பேசி அசத்தியிருப்பார்.
இதையடுத்து ஹிந்தியில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக வலம்வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவர் நடிகர் ரன்பீர் கபூரை காதலிப்பதாக அறிவித்தார். ரன்பீர் கபூர் பிரபல நடிகை கரீனா கபூரின் சகோதரராவார். இவருள் இருவரும் ஒன்றாகவே ஊர் சுற்றி வருகின்றனர்.
இவர்களை விரைவில் திருமணம் செய்யப்போதாவாகவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா தற்போது சேலையில் மிக அழகாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கல்யாணக்கலை வந்துவிட்டது போல, அப்படியே புதுப்பெண் போல ஜொலிக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.