ப்ளீஸ் ஒரே படம் தான்.! கனவு கன்னியை கெஞ்ச வைத்த புஷ்பா.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா எனும் ஒரு படத்தின் மூலம் தற்போது பான் இந்திய நடிகராக மாறிவிட்டார். அப்படத்தின் வெற்றி அவரை இந்தியா முழுவதும் தெரிந்த முகமாக மாற்றிவிட்டது.

அந்த படம் தியேட்டரில் வெளியானதை விட அதன் பிறகு ஓடிடி தளங்களில் வெளியான பிறகு பிரபலங்கள் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி வருகின்றனர். இப்படத்தை தியேட்டரில் மிஸ் செய்துவிட்டோம் என்றும் வருத்தப்பட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் - மாலையும் கழுத்துமாக போட்டோவில் சிக்கிய சிவகார்த்திகேயன்.! முழு விவரம் உள்ளே.!

அந்த வரிசையில் இணைந்துள்ளார் பாலிவுட் கனவு கன்னி ஆலியா பட். அவர் குடும்பத்துடன் புஷ்பா படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த எனது குடும்பத்தினர் அல்லு அர்ஜுனின் ரசிகர்களாக மாறிவிட்டனர். அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேர்ந்து எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்கும் அளவிற்கு அப்படம் எனது குடும்பத்தாரை மிகவும் கவர்ந்துவிட்டது என்று சிலாகித்து தனது கருத்துக்களை ஆலியா தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story