எல்லாம் வதந்தி! எதையும் நம்பாதீங்க - அவரே சொல்லிட்டாரு! ஏகே 63 பற்றிய புதிய அப்டேட்

AK 63: சில தினங்களாக அஜித்தின் ஏகே 63 படம் பற்றிய ஒரு சர்ச்சை இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை முதலில் ஆதிக் இயக்க இருந்ததாகவும் ஆனால் இப்போது அந்தப் படம் வேறொரு இயக்குனருக்கு கைமாறியதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது.

மார்க் ஆண்டனி பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே அஜித்தின் தீவிர ரசிகர். அவர்தான் ஏகே 63 படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஆனால் ஏகே 63 ஒரு பேன் இந்திய படமாக உருவாக இருப்பதால் அந்தளவுக்கு ஆதிக் ரவிச்சந்திரனால் ஈடுகொடுக்க முடியுமா என்ற சந்தேகமும் இருந்து வந்ததாம்.

இதையும் படிங்க: அமீர் எனக்கு எப்பையுமே அண்ணன் தான்.. அய்யா என்னை மன்னிச்சிடுங்க.. ஞானவேல்ராஜா ட்வீட்..

அதன் காரணமாகவே ஏகே 63 படத்தை தெலுங்கு பட இயக்குனர் குறிப்பாக வீரசிம்மா ரெட்டி பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கப் போவதாக நேற்று ஒரு செய்தி வைரலானது. ஏற்கனவே விடாமுயற்சி பட ஆரம்பத்தில் விக்னேஷ் சிவன் விலகிய பிறகு அந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற அடிப்படையில் அப்பொழுதும் கோபிசந்த் பெயர் அடிபட்டது.

மீண்டும் ஏகே 63 படத்தை இந்த கோபிசந்த் மலினேனிதான் இயக்கப் போகிறார் என்ற ஒரு செய்தி வைரலானதை தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: போர இடமெல்லாம் கன்னிவெடி! விக்ரம் படத்திலயும் படாத பாடு பட்ட அமீர் – 10 லட்சம் கொடுத்தும் புண்ணியமில்ல

அதாவது ஏகே 63 பட தொடர்பாக உலாவரும் செய்தி பற்றி அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திராவிடம் கேட்டதாகவும் அதற்கு சுரேஷ் சந்திரா வெளியான செய்திகள் அனைத்தும் தவறானவை என்று கூறியதாகவும் அந்த பத்திரிக்கையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அதனால் வீண் வதந்திகள் எதையும் நம்ப வேண்டாம் என்றே அந்த பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார். மேலும் அஜித்திடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பு என்றாலும் அது அவரின் மேலாளரான சுரேஷ் சந்திராவிடம் இருந்தே இதுவரை வெளிவந்திருக்கின்றன. அதனால் இதையும் அஜித் சொன்னதை போலவே ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.

 

Related Articles

Next Story