ஏஆர்.ரகுமான் மீதுள்ள கோபத்தை பாட்டுல காட்டுனாரா?.. இயக்குனரை பீதியடையச் செய்த இளையராஜா..
தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவனாக இருப்பவர் இசைஞானி இளையாராஜா. தொழில் திமிரு அதிகம் இளையராஜாவிற்கு என்று இயக்குனர் ஆர்.சுந்தராஜன் ஒரு பேட்டியில் கூறியதை இங்கு நினைவு படுத்தவேண்டும். ஏனெனில் அந்த காலங்களில் அவரிடம் ஒரு ஏழு ட்யூன்கள் இருந்தால் அதை முழுவதையும் ஒரே படத்தில் தான் பயன் படுத்த வேண்டும் என நினைப்பார்.
அந்த அளவுக்கு தன் பாட்டின் மீது நம்பிக்கை வைத்திருப்பார். எல்லா பாடல்களும் கண்டிப்பாக ஹிட் ஆகும் என நினைப்பார். தன் இசையின் மீதும் தன் திறமையின் மீது எப்பவுமே அவருக்கு ஒரு கர்வம் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் இயக்குனர் லியாகத் அலிகான் ஒரு பேட்டியில் இளையராஜாவை பற்றி கூறும் போது சில சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்தார்.
லியாகத் அலிகான் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த படம் தான் ‘கட்டளை ’ திரைப்படம். இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. ஆனால் அவருக்கு முன்னாடி ஏஆர்.ரகுமானை கமிட் செய்திருக்கிறார்கள் லியாகத் அலியும் படத்தின் தயாரிப்பாளரும். ரகுமானை ஓகே செய்து அட்வான்ஸ் எல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.
இதில் லியாகத் அலி கானிடம் என்ன ஒரு பழக்கம் எனில் தான் சம்பந்தப்பட்ட எந்த விஷயமானாலும் உடனே விஜயகாந்திடமும் இப்ராஹிம் ராவுத்தரிடமும் கூறுவது வழக்கம். ரகுமான் விஷயத்தையும் போய் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் ‘இதுவரை நாம் சம்பந்தப்பட்ட அனைத்துப் படங்களுமே இளையராஜாவை வைத்து தான். இதில் நீ புதிதாக ரகுமானை உள்ளே நுழைத்தால் அது சரிவராது, உடனே கொடுத்த அட்வான்ஸை வாங்கி விடு’ என கூறியிருக்கின்றனர்.
இவரும் அப்படியே செய்திருக்கிறார். இளையராஜாவும் இசையமைக்க வந்திருக்கிறார். இரண்டரை மணி நேரத்தில் ஒரு படத்திற்கான எல்லா ட்யூன்களையும் முடிக்கும் இசைஞானி இந்தப் படத்திற்கான ஒரு பாடலை கூட சரியாக போடவில்லையாம். இருக்கும் போதே நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி விடுவாராம்.
இப்படியே செய்து கடைசி வரை படத்தின் எல்லா பாடல்களும் திருப்தி இல்லாமல் தான் வந்திருக்கிறது. படமும் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென செல்வமணி வந்து லியாகத் அலி கானிடம் ‘முதலில் இந்தப் படத்திற்கு ரகுமானை தான் ஓகே செய்தீர்களா?’ என்று கேட்டிருக்கிறார்.
லியாகத் அலி கான் ‘உங்களுக்கு எப்படி தெரியும்’ எனக் கேட்க ‘இல்ல, ரிக்கார்டிங்கில் கங்கை அமரனும் இளையராஜாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கங்கை அமரன் இளையராஜாவிடம் அவன் தான் நீங்கள் தான் வேண்டும் என்று வந்துட்டான்ல, அந்தக் கோபத்தை ஏன் படத்துல காட்டுகிறீர்கள், ரகுமானை விட்டு உங்களை தானே தேடி வந்திருக்கான்’ என்று பேசிக் கொண்டிருந்தார்களாம்.
இதையும் படிங்க : அப்பவே அப்படி ஒரு க்ளைமாக்ஸ்!.. தணிக்கை குழு பார்த்து என்ன சொன்னார்கள் தெரியுமா?..
அதன் பிறகே லியாகத் அலி கான் அவருக்குள்ளாகவே நினைத்துக் கொண்டாராம். ஒரு வேளை ரகுமானுக்கு கொடுத்த அட்வான்ஸ், அதன் பிறகு இளையராஜாவை ஓகே செய்தது இவற்றையெல்லாம் மனதில் வைத்து தான் இளையராஜாவால் ட்யூன் போட முடியவில்லையோ என நினைத்துக் கொண்டாராம். இந்த தகவலை லியாகத் அலி கான் அந்தப் பேட்டியில் கூறினார்.