ஓடாத படங்கள் கூட ஓடியிருக்கு.. 90’s காலத்தில் மொத்த சினிமாவையும் தன்வசம் வைத்திருந்த ஒரே விமர்சகர்!..
சமுக ஊடகங்கள், இணையதளங்கள் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் யார் வேண்டுமென்றாலும் ஒரு திரைப்படத்தை பற்றி விமர்சனம் செய்யலாம் என்ற நிலை மாறியிருக்கிறது. ஆங்காங்கே பல யூடியூப் சேனல்கள், டிவிட்டர்கள் இவற்றின் மூலம் ஒரு தனிமனிதர் சாம்ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் விமர்சனம் என்பது ஒரு நீதிபதி எப்படி நீதிமன்றத்தின் நிலைமை, உண்மைத்தன்மை இவற்றையெல்லாம் ஆராய்ந்து தீர்ப்பு வழங்குகிறார்களோ அதே போல் தான் ஒரு படத்தை பற்றிய சரியான நிலைப்பாடு , அதை சொல்லும் விதம், சொல்லும் விமர்சனத்தால் அது சம்பந்தப்பட்ட யாரையும் பாதிக்காத அளவிற்கு இருக்க வேண்டும்.
ஆனால் இன்றைய விமர்சகர்கள் தன் வாய்க்கு வந்ததை பணத்திற்காக இடைவெளி வரைக்கும் ஒரு விமர்சனம், இடைவெளி முடிந்த பின் ஒரு விமர்சனம் என பிரித்து பிரித்து அவ்வப்பொழுது கூறிவருகிறார்கள். இப்படி ஒரு காலகட்டத்தில் இருக்கும் நாம் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் 90’s காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரே விமர்சகராக இருந்தவர் டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேஷ்.
இதையும் படிங்க :சங்கருக்கும் ரஜினிக்கும் அப்படி என்னதான் பிரச்சினை!.. ‘சிவாஜி’ படப்பிடிப்பில் நடந்த சம்பவம்…
1998 ஆம் ஆண்டு ஆரம்பித்த இவரது இந்த நிகழ்ச்சி 2019 வரை கிட்டத்தட்ட 1088 வாரங்கள் வெற்றிகரமாக ஓடி ஆல் டைம் ஃபேவரைட் விமர்சகராக மாறியிருக்கிறார். ஒரே ஆளாக இருந்து ஒரு படத்தின் மையக்கருத்துக்களையும் நிறை, குறைகளை அலசி ஆராய்ந்து இவர் சொல்லும் விதம் பார்க்கும் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும். ஓடாத படங்கள் கூட இவரது விமர்சனத்தால் ஓடியிருக்கிறது என்று சொல்லலாம்.
மேலும் இப்பொழுதெல்லாம் படம் வந்ததுமே அன்று மதியத்திற்குள்ளாகவே அந்த படத்தின் விமர்சனத்தை தெரிவித்து விடுகிறார்கள். ஒரு வேளை படம் பற்றிய விமர்சனம் படத்தை கெடுப்பதாக இருந்தால் படம் பார்க்க வரும் ரசிகர்களை அது பாதிப்பதாக அமையும். அதன் மூலம் படம் எடுத்தவர்களுக்கும் பெரிய நஷ்டமாக போய்விடும். ஆனால் இவர் தொகுத்து வழங்கும் போது வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் என்றால் ஞாயிற்றுக் கிழமை இவரது நிகழ்ச்சியில் அந்த படத்தின் நிலை ‘புதுவரவு’ என்ற லிஸ்டில் தான் இருக்கும். அதற்கு அடுத்தவாரம் தான் படத்தின் மொத்த விமர்சனத்தையும் கூறுவார்.
அதற்காகவும் காத்திருந்து பார்த்த மக்கள் ஏராளம். சில நேரத்தில் ஒவ்வொரு படத்திற்கும் இவர் கூறும் பஞ்ச் அனைவரையும் ரசிக்கும் படியாக வைக்கும். எந்த நிகழ்ச்சி பார்க்கிறோமோ இல்லையோ ஞாயிற்றுக் கிழமை 9.30 மணி ஆனாலே டாப் 10 மூவிஸ் என்ற நிகழ்ச்சி தான் அனைவரது இல்லங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும். மொத்தத்தில் டாப் 10 சுரேஷ் அனைவருக்கும் கிரஷ்.