அட்லி - அல்லு அர்ஜூன் பட பட்ஜெட்டையும் சம்பளத்தையும் கேட்டா தலையே சுத்துதே!…..

ஷங்கரிடம் உதவியாளாராக இருந்ததாலோ என்னவோ மிகவும் அதிக பட்ஜெட்டில் படம் எடுத்து தயாரிப்பாளர் கதறவிடுபவர்தான் அட்லி. சொன்ன பட்ஜெட்டை விட அதிக செலவு செய்வதும், சொன்ன நாட்களை விட அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதும் இவரின் ஸ்டைல். விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை எடுத்தார்.
அதன்பின் பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தை ஷாருக்கானே தயாரித்தும் இருந்தார். விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான இந்த படம் இந்தியா முழுவதும் வசூலை பெற்று 1300 கோடி வசூல் செய்தது.
இதனால் அமீர்கான், சல்மான்கான் போன்ற பாலிவுட் நடிகர்கள் கூட அட்லியின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டனர். சல்மான்கானை வைத்து ஒரு படம் பேசப்பட்டது. அதில், கமல் கெஸ்ட் ரோலில் நடிக்கவும் பேசினார்கள். ஆனால், கமல் மறுத்துவிட்டார். அதன்பின் ரஜினியிடமும் பேசினார்கள். அவரும் ஆர்வம் காட்டவில்லை.
அதன்பின் புஷ்பா பட புகழ் அல்லு அர்ஜுனிடம் கதை சொல்லி ஓகே செய்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன் வந்தது. ஆனால், அல்லு அர்ஜூன் மற்றும் அட்லி கேட்ட சம்பளத்தை கேட்டு ஆடிப்போன கலாநிதி மாறன் என்னால் முடியாது என சொல்லிவிட்டார். எனவே, தில் ராஜூ உள்ளிட்ட சில தயாரிப்பாளரிடம் போனார்கள். ஆனால், அவரும் முன்வரவில்லை.
அதன்பின் கலாநிதிமாறனிடமே பேசி சம்பளம் மற்றும் லாபத்தில் பங்கு என முடிவெடுக்கப்பட்டு இப்போது பிராஜெக்ட் டேக் ஆப் ஆகியிருக்கிறது. இந்நிலையில், அல்லு அர்ஜூனுக்கு 200 கோடி மற்றும் அட்லிக்கு 100 கோடி என சம்பளம் பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என எல்லாம் சேர்த்து சம்பளம் மட்டுமே 350 கோடி என்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 500 லிருந்து 600 கோடி வரை இருக்கலாம் என்கிறார்கள். வி.எப்.எக்ஸ் காட்சிகளை கொண்ட பேன் இண்டியா படமாக இப்படம் உருவாகவுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.