இந்த பூனையும் பால் குடிக்குமா?... கடையில் சரக்கு வாங்கும் அல்லு அர்ஜூன்...வைரல் வீடியோ...
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜூன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அல வைகுந்தபுரமுலோ படம் ஆந்திராவில் செம ஹிட். தற்போது அவரின் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது.
முதன் முறையாக அல்லு அர்ஜூன் நடிப்பில் ஒரு தெலுங்கு படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற சாமி மாற்றும் ஓ சொல்றியா பாடல்கள் ஏற்கனவே தமிழகத்தில் ஹிட் அடித்துள்ளது. இப்படம் மூலம் ஐகான் ஸ்டாராக மாறியுள்ளார் அல்லு அர்ஜூன். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இன்று காலை ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு அல்லு அர்ஜூன் கோவா சென்றிருந்த போது ஒரு மதுபானக்கடையில் சரக்கு வாங்க சென்றபோது அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் அது பதிவாகியுள்ளது.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.