கண்ணாடில ஸ்டிக்கர் ஓட்டுனது குத்தமா.?! புஷ்பாவுக்கு ஆப்பு அடித்த போலீசார்.!

தெலுங்கு சினிமாவில் தற்போது மிக முக்கிய ஹீரோவாக மாறியிருக்கிறார் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் ராஜமௌலியை வைத்து மட்டுமே பான் இந்தியா ஹிட் கொடுத்த தெலுங்கு நடிகர்கள் மத்தியில் அல்லு அர்ஜுன், சுகுமாரை வைத்து பான் இந்தியா ஹிட் கொடுத்து விட்டார்.

தற்போது புஷ்பா 2விற்கு ஆயத்தமாகி வருகிறார். இவர் அண்மையில் காவல்துறையினரால் ஒரு சிக்கலில் சிக்கினார். ஆம், போக்குவரத்துக்கு விதிகளை மீறியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திரையுலகில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது, புதிய போக்குவரத்து விதிகளின் படி, கார் கண்ணாடிகளில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டியிருக்ககூடாது. அதாவது உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது போக்குவரத்து காவல்துறையினருக்கு தெரியவேண்டும்.

இதையும் படியுங்களேன் - நயன்தாரா ஓகே சொல்லிட்டாங்க., ஆனால் நான் நடிக்க மாட்டேன்.! உதறி தள்ளிய 'அந்த' ஹீரோ.!

அல்லு அர்ஜுனின் காரில் உள்ள கண்ணாடிகளில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. அதனை கவனித்த காவல்துறையினர், அவரது காரை நிறுத்தி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி 700 ரூபாய் அபராதம் விதித்திருந்தனராம். இந்த செய்தி தான் இன்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.

 

Related Articles

Next Story