"வாய் வச்சிக்கிட்டு சும்மா இல்லாம எனக்கு தல வலியா இருக்கே" ராஷ்மிகா மந்தனாவால் கடுப்பில் இருக்கும் அல்லு அர்ஜூன்..
ராஷ்மிகா தேவை இல்லாமல் பேசி வரும் சில சர்ச்சை கருத்துகளால் தன் படத்தின் வியாபாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என அல்லு அர்ஜூன் ராஷ்மிகா மந்தனா மீது கடுப்பில் இருப்பதாக தெரிகிறது.
தமிழில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா கீதா கோவிந்தம் படம் மூலம் தான் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, கன்னடா என பிஸியாக நடித்து வருகிறார்.
காந்தாரா படத்தின் நாயகன் ரிஷிப் ஷெட்டி இயக்கத்தில் உருவான கிரிக் பார்ட்டி படம் தான் ராஷ்மிகாவின் முதல் படம். அப்படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டிக்கும் நெருக்கம் உருவாகி காதலானது. திருமண செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து நிச்சயத்தார்த்தம் செய்தனர். ஆனால் அம்மணி மார்க்கெட் சற்றென உச்சத்திற்கு போனது.
இது இருவர் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. அதனால் அவருடன் ப்ரேக் அப் செய்துவிட்டார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் லவ்வில் இருப்பதாகும் கிசுகிசுக்கள் இருக்கிறது. இந்நிலையில் தான் கன்னட சினிமாவின் மாஸ் ஹிட் படமான காந்தாராவை பார்த்து விட்டீர்களா என ஒருவர் சாதாரணமாக கேட்க ராஷ்மிகா இல்லை எனச் சொல்லி விட்டார்.
இந்த பதிலால் கன்னட ரசிகர்கள் கடுப்பில் அவரை வெகுவாக விமர்சித்தனர். தொடர்ந்து ஒரு பேட்டியிலும் தனது முதல் படத்தினை குறித்து ராஷ்மிகா கூறினார். ஆனால் அந்த பட தயாரிப்பு நிறுவனத்தினை பற்றியோ இயக்குனர் ரிஷிப் ஷெட்டி குறித்தோ எதுவுமே சொல்லவில்லை.
இதையும் படிங்க: கோடி கோடியாய் கொடுத்தாலும் இந்த விஷயத்தை செய்ய மாட்டேன்… அடம் பிடிக்கும் புஷ்பா.! கலங்கிய ரசிகர்கள்.!
இதனால் கன்னட சினிமா உலகமே கொதித்தெழுந்தது. இனி ராஷ்மிகாவின் படங்களை திரையிடக்கூடாது என பலரும் கோஷம் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து திரைப்பட விநியோகிஸ்தர்களும் பேச்சுவார்த்தை நடத்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஷ்மிகாவின் படங்கள் தடை செய்யப்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது அல்லு அர்ஜூன் தான். அவரின் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படம் பேன் இந்தியா படமாக உருவாக இருக்கிறது. தெலுங்கு சினிமா உலகை விட தற்போது வளர்ந்து வரும் கன்னடத்தில் படம் ரிலீஸ் செய்வது முக்கியம் என படக்குழு விரும்புகிறது. ராஷ்மிகாவால் தற்போது அதுவும் பிரச்னையாகி இருப்பதால் அல்லு அர்ஜூன் கடுப்பில் இருக்கிறாராம்.