அட்லியை தட்டி தூக்கிய மாஸ் ஹீரோ!.. அடுத்த ஆயிரம் கோடி வசூல் ரெடி!.. சும்மா களைகட்ட போகுது!..

0
266
atlee

Allu arjun: ராஜா ராணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் என்பதால் அவரைப் போலவே அதிக பட்ஜெட்டில் படங்களை இயக்கி தயாரிப்பாளர்களை கதறவிடுவார். ஆனாலும் விஜயின் ஆசி இவருக்கு கிடைத்ததால் அவரை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

அதன்பின் பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் ஹிந்தி பேசும் மாநிலங்களில் பெரிய வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: அஜித்தை அப்போதே அரசியலுக்கு அழைத்த ஜெயலலிதா!.. அதற்கு இதுதான் காரணமாம்!..

உலகம் முழுவதும் உள்ள ஷாருக்கான் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் ஆயிரம் கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே, இந்திய அளவில் பெரிய இயக்குனராக அட்லீ மாறினார். அதோடு, அடுத்து அவர் இயக்கும் படத்தில் யார் ஹீரோ என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

ஆனால், அவரோ ‘அடுத்து ஹாலிவுட் எழுத்தாளருடன் இணைந்து கதை எழுதி வருகிறேன் விஜய், அல்லது ஷாருக்கான் கால்ஷீட் கொடுத்தால் அவர்களை வைத்து எடுப்பேன் இல்லையெனில் வேறு ஹீரோவை வைத்து எடுப்பேன்’ என சொல்லி வந்தார். எனவே, அவரின் இயக்கத்தில் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு பட முன்னணி நடிகர்கள் சிலர் ஆசைப்பட்டனர்.

இதையும் படிங்க: முதல் சிங்கிள் ஷாட் ஹீரோவாக சிவாஜி மாறியது இப்படித்தான்!.. நடிகர் திலகம்னா சும்மாவா!

தற்போது புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜூன் – அட்லி கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதுவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பொதுவாக தெலுங்கு நடிகர்கள் நடிக்கும் படங்களை தெலுங்கு பட தயாரிப்பாளர்கள்தான் தயாரிப்பார்கள்.

allu arjun

ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் அட்லியுடன் தொடர்ந்து பேசி வருவதால் அந்நிறுவனத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜூன் இப்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் 2 படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இதில் அட்லி படம் எப்போது துவங்கும் என்பது தெரியவில்லை.

இதையும் படிங்க: இந்த சீனுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல!… ஹீரோவை விட்டுட்டு வில்லன்களை தூக்கி பிடிக்கும் சிறகடிக்க ஆசை

google news