சூப்பர் ஹிட் பான் இந்தியா படத்தை தவறவிட்ட நடிகர்... என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?
சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் அதிகரித்து வரும் பான் இந்தியா படங்கள் வரிசையில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் டாப் நடிகை சமந்தா ஐட்டம் பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்தில் ஹைலைட் என்றால் சமந்தா ஆடிய பாடல் தான். தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த புஷ்பா படம் தற்போது வரை 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
முதல் பாகமே இந்த அளவிற்கு அதிரி புதிரி வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கி விட்டது. இந்நிலையில் இப்படம் குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி புஷ்பா படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது அல்லு அர்ஜூன் கிடையாதாம். புஷ்பா படத்தில் ஹீரோவாக நடிக்க இயக்குனர் சுகுமார் முதலில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை தான் அணுகியுள்ளார். ஆனால் மகேஷ்பாபு இந்த பட வாய்ப்பை வேண்டாம் என கூறி மறுத்து விட்டாராம்.
மேலும் இந்த படத்தில் கதாநாயகனின் குணாதிசயத்தில் எதிர்மறைப் பண்புகள் அதிகமாக இருப்பதால் அதில் நடிக்க தயங்கிய மகேஷ் பாபு அந்த வாய்ப்பை வேண்டாம் என கூறி மறுத்துள்ளார். ஆனால் அவர் நிராகரித்த அதே கதாபாத்திரத்தில் நடித்து தான் தற்போது அல்லு அர்ஜூன் டாப் நடிகராக இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார்.
என்ன மகேஷ் சார் இப்படி கைக்கு கிடைச்ச வாய்ப்பை தவறவிட்டுட்டீங்களே?