அல்லு அர்ஜூனின் கோலிவுட் காதலி...நோ சொன்ன குடும்பத்தினர்?
தெலுங்கு திரையுலகத்தின் சூப்பர்நாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜூன் கோலிவுட் நாயகி ஒருவரை காதலித்ததாக தகவல் கசிந்துள்ளது.
சினிமா குடும்பத்தில் இருந்து வந்ததால்,குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானவர் அல்லு அர்ஜூன். பின்னர், சுகுமார் இயக்கத்தில் ஆர்யா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதுமட்டுமல்லாது,நிறைய ரசிகர்களையும் பெற்று தந்தது. சில அவார்ட்டுகளும் அர்ஜூனுக்கு கிடைத்தது.
தொடர்ந்து, பல படங்களில் நடித்த அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தார். அப்பொழுது தான் அவருக்கு நடிகை காஜல் அகர்வால் அறிமுகம் கிடைத்து இருக்கிறது. இருவரும் யெவடு மற்றும் ஆர்யா 2 படங்களில் இணைந்து நடித்தனர்.
இதையும் படிங்க:கோடி கோடியாய் கொடுத்தாலும் இந்த விஷயத்தை செய்ய மாட்டேன்… அடம் பிடிக்கும் புஷ்பா.! கலங்கிய ரசிகர்கள்.!
உடனே, இருவரும் தனிக் குடித்தனம் நடத்த துவங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த காதல் வெளியில் கசிந்தது. பத்திரிக்கைகள் இதை பற்றி பேசியது. இதனால் அல்லு அர்ஜூன் தனது பெற்றோரிடம் காதல் குறித்து கூறினாராம்.
ஆனால் அவர் தந்தை அல்லு அரவிந்த் பொறுமையாக கேட்டவர். அர்ஜூனை நோக்கி அல்லு-கொனிடேலா குடும்பத்தில் எந்த நடிகையும் மருமகளாக வர இயலாது. நம் குடும்பத்தில் தான் பெண் பார்க்கப்படும் என சொல்லிவிட்டாராம். அப்பா பேச்சை தட்டாத பிள்ளையாக அல்லு அர்ஜூனும் தனது காதலை மூட்டை கட்டியதாக தகவல்கள் கிசுகிசுக்கின்றன.
பின்னர் அல்லு அர்ஜூன், சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதைப்போல, காஜல் சமீபத்தில் தான் கௌதம் கிட்சலு என்பவரை கல்யாண செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.