Pushpa 2: ஓவர் கான்ஃபிடன்ஸ்..! ரிஸ்க் எடுக்கும் புஷ்பா 2 படக்குழு!… இந்தியன் 2 போல ஆகாம இருந்தா சரி!…

Published on: November 12, 2024
---Advertisement---

புஷ்பா 2 திரைப்படத்தின் ரன் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது.

புஷ்பா திரைப்படம்: கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இதையும் படிங்க: Nepoleon: நெப்போலியன் மகன் தனுஷுக்கு மனைவி கொடுத்த முதல் பரிசு!… செம லவ்வா இருக்கே!…

பான் இந்தியா படம்: படத்திலிருந்த அனைத்து காட்சிகளும் மிரட்டலாக இருந்ததால் தெலுங்கு மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாதியை எடுப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருந்தார்கள். அதன்படி தற்போது படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் சில தினங்களில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீ லீலா குத்தாட்டம்: புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் நடிகை சமந்தா கவர்ச்சி நடனமாடி இருந்த நிலையில் இரண்டாம் பாதியில் நடிகை ஸ்ரீ லீலா குத்தாட்டம் போட்டு இருக்கின்றார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினரை வெளியிட்டு இருந்தார்கள். முதல் பாதியை காட்டிலும் இரண்டாவது பாதி அதிக பட்ஜெட்டில் உருவாகி இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன்களை மிகச் சிறப்பாக செய்வதற்கு படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள் .

pushpa

ரன் டைம்: இதனால் நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ப்ரோமோஷன் வேலைகளை படக்குழுவினர் தற்போது தொடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் ரன் டைம் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கின்றது.

அதன்படி புஷ்பா 2 திரைப்படத்தின் ரன் டைமானது 3 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகுந்த பதட்டத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் இரண்டரை மணி நேரம் இருக்கும் படங்களே சில சமயம் ரசிகர்களுக்கு போர் அடித்து விடுகின்றது. அப்படி இருக்கும் நிலையில் புஷ்பா 2 திரைப்படத்திற்கு எதற்காக இவ்வளவு நேரம் ரன் டைம் இருக்கின்றது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதையும் படிங்க: Kanguva: ஒரே ஒரு போன் கால்!.. கங்குவா சிறப்பு காட்சிக்கு பர்மிஷன் வாங்கிய சூர்யா!.. செம மேட்டரு!..

புஷ்பா 2 ஒரு பக்காவான கமர்சியல் படம் என்பதால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக சலிப்பை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையில் இவ்வளவு நேரத்தை படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் இப்படி தான் 3 மணி நேரம் ரன் டைமாக இருந்து வெளியானது. ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படமும் அப்படி ஒரு நிலைமைக்கு போகாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.