Pushpa 2: ஆத்தீ! ஓடிடி மட்டும் இம்புட்டு கோடியா?
புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியானது. தொடர்ந்து அப்படத்தின் அடுத்த பாகம் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. இந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இந்த படத்தின் 2-வது பாகம் வெளியாகலாம் என தெரிகிறது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாஸில் உள்ளிட்ட ஏராள நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் இந்தியளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது.
இயக்குநர்-ஹீரோ இடையிலான முட்டல், மோதல்களினால் தான் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் புஷ்பா 2 ஓடிடி உரிமம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி நெட் பிளிக்ஸ் தளம் இந்த உரிமையை வாங்கியுள்ளது. இதற்காக சுமார் 270 கோடி ரூபாயை நெட் பிளிக்ஸ் நிறுவனம் அளித்துள்ளதாம்.
இதுவரை இவ்வளவு விலைக்கு எந்த படமும் விற்கப்பட்டதில்லை. இதன் மூலம் படத்திற்கு இருக்கும் வரவேற்பினை நாம் அறிந்து கொள்ளலாம். இப்படத்தின் முதல் பாகத்தினை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.