
Cinema News
யாரு சாமி நீங்க.?! ஹாலிவுட் இயக்குனர்களுக்கே பாடம் எடுக்கும் நம்ம ஊரு இயக்குனர்.! இது ரெம்ப ஓவர் சார்.!
நேரம் எனும் தமிழ் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து பிரேமம் எனும் திரைப்படத்தை இயக்கி இந்தியா முழுவதும் தெரிந்த இயக்குனராக மாறிவிட்டார்.
அந்த அளவுக்கு பிரேமம் திரைப்படம் ஒரு பெரிய தாக்கத்தை இந்திய சினிமாவில் ஏற்படுத்தியது. வழக்கமான காதல் கதை என்றாலும், அதனை கேரளாவின் மண் மணம் மாறாமல் அதை அப்படியே பதிவு செய்து அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் படமாகியிருந்தார்.
அதன்பிறகு தற்போது பிரித்திவிராஜ் – நயன்தாரா இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். இவர் அண்மையில் தனது முகப்புத்தக பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டிபன் ஸ்பீல்பெர்க் , அவதார் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆகியோரை குறிப்பிட்டு இவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் உலகமெங்கும் உள்ள சினிமா கலர் கோடிங் பற்றி அவர்களுக்கு யோசனை கூறும் வண்ணம் அந்த பதிவில் இருந்தது. மேலும், இரண்டு உதாரணங்களையும் குறிப்பிட்டிருந்தார். 5ஜி போனில் 2 ஜி ஸ்பீடில் நாம் உபயோகித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் என கலர் கோடிங் பற்றி அவர் விவரித்திருந்தார்.
இதையும் படியுங்களேன் – அவன் என்ன பண்ணிட்டான்.! அந்த நடிகர் மீது வீண் பழி போடும் சமந்தா.! வெளியான அதிர்ச்சி வீடியோ..,
அவரின் இந்த யோசனை பதிவு தான் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. ஹாலிவுட் இயக்குனர்களுக்கு நம்ம ஊரு இயக்குனர்கள் அறிவுரை கூறும் வண்ணம் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள் என பலரும் வைரலாக இதை பதிவு பரப்பி வருகின்றனர்.