More
Categories: Cinema News latest news

ரெண்டு பேருக்கும் தீனி போட்டா விஸ்வாசத்தை அங்க போய் காட்டுதுங்க! வாரிக் கொடுத்த மனுஷனுக்கு காட்டும் நன்றியா இது?

Atllee vs Nelsojn: தொடர்ந்து பல நல்ல ஹிட் படங்களை கொடுத்து வரும் சன் பிக்சர்ஸ்ன் நிறுவனம் சமீபத்தில் ஒரு இமாலய வெற்றியை ருசித்த மகிழ்ச்சியில் இருக்கின்றது. ரஜினியின் ஜெய்லர் திரைப்படம் இந்தளவுக்கு வசூல் சாதனையை பெறும் என சன் பிக்சர்ஸ் நிறுவனமே எதிர்பார்த்திருக்காது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு பம்பர் லாட்டரியை எடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட 700 கோடிக்கும் அதிகமாக வசூலை அள்ளி எடுத்திருக்கிறது. இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் நெல்சனுக்கு தன் நிறுவனம் மூலம் வாய்ப்பு கொடுப்பதாக ஒரு பெரிய அட்வான்ஸ் தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ‘ஜெய்லர்’ வெற்றி நெல்சனை தூக்கி விடும்னு பார்த்தா துரத்தி விட்டுருச்சு! அப்போ அவ்ளோதானா?

இதே போல் பாலிவுட்டில் மிகப்பெரிய உச்சத்தை தொட்ட ஜவான் படத்தை கொடுத்த அட்லீக்கும் ஒரு கணிசமான அட்வான்ஸ் தொகையை கொடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறது.

ஒரு பக்கம் அட்லீ. ஒரு பக்கம் நெல்சன் என இருவருமே இளம் இயக்குனர்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் அட்லீ மற்றும் நெல்சன் இருவருமே தெலுங்கு தேசம் நோக்கி கடையை திறந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ‘ரஜினி171’க்கு பக்கா ப்ளான் போட்ட லோகேஷ்! ஒருத்தன் உள்ள வர முடியாது – இவங்க இருக்கும் போது என்ன பயம்?

அதாவது அட்லீ இந்தப் பக்கம் அட்வான்ஸ் வாங்கினாலும் அல்லு அர்ஜூனை வைத்து படம் பண்ணலாம் என்ற ஐடியாவில் அவரை போய் சந்தித்திருக்கிறார். இன்னொரு பக்கம் அல்லு அர்ஜூனே நெல்சனை அழைத்து எனக்காக எதாவது கதை இருந்தால் சொல்லும் படி கேட்டாராம்.

ஆனால் அட்லீ அல்லு அர்ஜூன் இணைய வாய்ப்பில்லை. ஆனால் நெல்சனுடன் அல்லு அர்ஜூன் இணைய வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள். அட்லீ , நெல்சன் என இருவருமே அட்வான்ஸ் வாங்கியது என்னமோ சன்பிக்சர்ஸ் நிறுவனத்திடம். ஆனால் வேலையைக் காட்டுவது அக்கட தேசத்திற்கு. எங்கேயோ லாஜிக் இடிக்கிற மாதிரி இருக்குதே என கோடம்பாக்கத்தில் புலம்பி வருகிறார்கள்.

இதையும் படிங்க: சிவாஜி படத்த பார்க்க மாட்டேன்… என் மேல நம்பிக்கை இருந்தா குடுங்க… ஓபனா சொன்ன நடிகர்…

Published by
Rohini

Recent Posts