Cinema News
விஜய் ஆண்டனியை ஃபாலோ செய்யாதீங்க! என்ன மாதிரியான நோய் வரும் தெரியுமா? பிரபல டாக்டர் பகீர்
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக தன் பயணத்தை ஆரம்பித்த விஜய் ஆண்டனி தொடர்ந்து பல படங்களுக்கு தன் தனித்துவமான இசையால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இவரது பாடல்கள் பெரும்பாலும் துள்ளலும் ஆட்டமுமாகத்தான் இருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் நாக்க முக்கா பாடல், டாக்சி டாக்சி பாடல், என் உச்சி மண்டல சுர்ருங்குது போன்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் பல பாடல்களை பாடவும் செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இப்படி இசையில் ஒரு புரட்சியை செய்தவர் திடீரென நடிப்பு பக்கம் தன் கவனத்தை திருப்பினார். நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்கள் மூலமாக ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றார் விஜய் ஆண்டனி. அந்தப் படங்கள் தொடர்ந்து வெற்றியடைய ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார்.
அவ்வப்போது இசைக் கச்சேரிகளையும் நடத்தி ரசிகர்களுக்கு ட்ரீட்டும் வைத்தும் வருகிறார். இவரின் நடிப்பில் மழைபிடிக்காத மனிதன் படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியை பொறுத்தவரைக்கும் பொது இடங்களுக்கு எங்கு சென்றாலும் காலில் செருப்பு அணிவதை தவிர்த்து வருகிறார்.
எந்தவொரு மேடை நிகழ்ச்சியானாலும் விழாக்களானாலும் செருப்பு அணிவதை தவிர்க்கிறார் விஜய் ஆண்டனி. அதற்கான காரணத்தை கேட்கும் போது செருப்பு அணியாமல் சென்றால் மனதிற்கு ஒரு வித அமைதியை தருவதாக கூறியிருந்தார். அதிலிருந்தே விஜய் ஆண்டனி வருகிறார் என்றால் அவரது காலைத்தான் பார்க்க ஆரம்பித்தனர்.
ஆனால் இது நோய்க்கு வழிவகுக்கும் என ஒரு பிரபல மருத்துவர் ப்ரூனே என்பவர் கருத்து தெரிவித்திருக்கிறார். காலில் செருப்பு அணியாமல் இருந்தால் ரத்த சோகை ஏற்பட்டுவிடும் என்று அந்த மருத்துவர் கூறியிருக்கிறார்.