நான் நாகார்ஜூனா வீட்டு மருமகளா? உண்மையை போட்டு உடைத்த விஜய் நாயகி

#image_title
Nagarjuna: நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவின் திருமணம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய வீட்டில் மீண்டும் ஒரு நாயகி மருமகளாக செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்தது. தற்போது இது குறித்து அந்த நாயகியே விளக்கம் கொடுத்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.
சமந்தாவை பிரிந்த நாக சைத்தன்யா சில ஆண்டுகள் கழித்து தற்போது சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய திருமணம் வெகு விமரிசையாக விரைவில் நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க: ரோகிணிக்கு விஜயா வைத்த சூப்பர் செக்.. ராதிகாவை விளாசிய இனியா.. தங்கமயிலின் திட்டம்!..
இந்நிலையில் நடிகை மீனாட்சி சவுத்ரி நாகர்ஜுனாவின் சகோதரி மகனான தெலுங்கின் முன்னணி நடிகர் சுஷாந்தை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இருவருக்கும் விரைவில் திருமணம் எனவும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியான தெலுங்கு பட பிரமோஷனில் கலந்து கொண்ட மீனாட்சி சவுத்ரி விளக்கம் அளித்து இருக்கிறார்.
இது குறித்த அவர் கூறும் போது, முதலில் நான் பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பதாக வதந்திகள் பரவியது. தற்போது என்னைப் பற்றி காதல் வதந்திகளும் பரவி வருகிறது. இப்பொழுது நான் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை. சிங்கிளாக தான் இருக்கிறேன். யாருடனும் நீங்களாக விருப்பமில்லை என ஓப்பனாக பதில் பேசி இருக்கிறார்.

Meenakshi _ Sushant
இந்த விளக்கத்தின் மூலம் அவர் நடிகர் சுஷாந்துடன் நான் காதலை மறுத்து இருப்பதாக கூறப்படுகிறது. மீனாட்சி சவுத்ரி நடிப்பில் சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் நிலையில் அவருக்கு தற்போது தென்னிந்திய சினிமாக்களில் வாய்ப்பு குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: lubber Pandhu: படம் ஹிட்டுனா கிஃப்ட் கொடுப்பாங்க! லப்பர் பந்து பட இயக்குனருக்கு நேர்ந்த சோகம்.. பெரிய மோசடி