அமைதிப்படத்தின் கதை அந்த ரஜினி படம்தான்!. பல வருட சீக்ரெட்டை உடைத்த சத்தியராஜ்!..
மணிவண்னன் இயக்கத்தில் சத்தியராஜ் நடித்து 1994ம் வருடம் வெளிவந்த திரைப்படம் அமைதிப்படை. இந்த படத்தில் சத்தியராஜ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அரசியலை கதைக்களமாக கொண்டு நையாண்டி செய்திருப்பார் மணிவண்ணன். தமிழ் சினிமாவில் எத்தனை அரசியல் படங்கள் வந்திருந்தாலும் இது போல ஒரு படம் இதற்கு முன்னும் வரவில்லை. இனிமேலும் வரப்போவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு நடப்பு அரசியலை கடுமையாக கிண்டலும், நக்கலும் செய்ததோடு, விமர்சனமும் செய்திருப்பார் மணிவண்ணன். படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு வசனமும் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலயிலும் பொருந்தும் படியே எழுதியிருந்தார் மணிவண்னன். குறிப்பாக ‘தப்பா பேசினா உஸ்ஸு.;. மன்னிப்பு கடிதம் கொடுத்தா இஸ்ஸூ’, மக்களுக்குள்ளயே சண்டைய மூட்டிவிட்டா நம்ம மேல இருக்க கோபத்த மறந்துவிடுவாங்க’.. ‘ஜாதின்னு ஒன்னு இருக்கர வரைக்கும் அரசியல்வாதிகளுக்கு பிரச்சனையே இல்ல’ என பல வசனங்கள் இப்போதும் பொருந்தும்.
கோவில் தேங்காய் பொறுக்கிக்கொண்டிருந்த அம்மாவாசை எப்படி அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏவாக மாறி மக்களை முட்டாளாக வைத்திருக்கிறார் என்பதற்கு சிறப்பான திரைக்கதை அமைத்திருந்தார் மணிவண்னன். அதிலும், நாகராஜ சோழன் இத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார் என ஒவ்வொரு முறையும் அறிவிக்கும்போதும் சத்தியராஜிடம் ஏற்படும் மாற்றங்களை அழகாக காட்டி இருப்பார் மணிவண்ணன்.
சமீபத்தில் கூட ஒரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சத்தியராஜ் கலந்துகொண்ட போது ‘அமைதிப்படை போல மீண்டும் ஒரு படத்தில் நடிப்பீர்களா?’ என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் சொன்ன அவர் ‘அமைதிப்படை போல ஒரு படத்தை மணிவண்ணனால் மட்டுமே எடுக்க முடியும். அவரால் மட்டுமே அப்படி எழுத முடியும்’ என சொன்னார்.
மேலும், அமைதிப்படை போல ஒரு படத்தை இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் எடுக்க முடியாது. அரசியல்வாதிகள் குடைச்சல் கொடுப்பார்கள். சென்சார் போர்டு அதிகாரிகளே இப்போது அனுமதிக்க மாட்டார்கள்’ என சொன்னார். மேலும், ரஜினி சார் நடித்த மிஸ்டர் பாரத் படத்தின் கதையும், அமைதிப்படை பட கதையும் ஒன்னுதான்.
அந்த படத்தில் அம்மாவை ஏமாற்றியவனை பழிவாங்க ரஜினி வருவார். அமைதிப்படை படத்தில் நான் போவேன். அந்த படத்தின் கதையில் பிஸ்னஸ் வரும். அமைதிப்படை படத்தில் அரசியல் இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால், நான் சொல்லாமல் இதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது’ என கூறினார்.