தேங்கா பொறுக்குன அமாவாசை.. ‘அமைதிப்படை’யில் அந்த சீன் எப்படி உருவாச்சு தெரியுமா?

by Rohini |   ( Updated:2025-04-25 09:13:42  )
தேங்கா பொறுக்குன அமாவாசை.. ‘அமைதிப்படை’யில் அந்த சீன் எப்படி உருவாச்சு தெரியுமா?
X

Amaithipadai Movie: தமிழ் நாட்டு அரசியலில் நடக்கும் ஊழல்கள், நடக்கும் அபத்தங்கள் என ஒன்று கூட மிச்சம் வைக்காமல் படங்களில் சத்யராஜ் மற்றும் கவுண்டமணி மூலம் நக்கலடித்திருப்பார் மணிவண்ணன். நடிகராகத்தான் இப்போது இருக்கும் 2 கே கிட்ஸ்களுக்கு தெரியும். ஆனால் மணிவண்ணன் ஒரு சிறந்த படைப்பாளி என்பதற்கு பல படங்கள் உதாரணமாக இருக்கின்றன. ஆனால் மணிவண்ணன் படம் என்று சொன்னால் நம் நினைவுக்கு வருவது அமைதிப்படை திரைப்படம்தான்.

சத்யராஜை வைத்து அரசியலில் நடக்கும் நாடகங்கள் , சீர்கேடுகள் என அனைத்தையும் வெட்ட வெளிச்சமாக ரகளையாக சொல்லியிருப்பார் மணிவண்ணன். அதுவும் அமாவாசை கேரக்டரை இந்த தமிழ் சினிமா இருக்கும் வரை யாராலும் மறக்க முடியாது. ஏன் சத்யராஜை யாராவது ரீமேக் செய்து நடிக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக அதில் அமாவாசை கேரக்டர் இருக்கும்.

பொதுவாகவே மணிவண்ணன் என்று சொன்னாலே நக்கல் மன்னன் என்று சொல்லலாம். கவுண்டமணியைத்தான் நக்கல் மன்னன் என்று சொல்வோம். ஆனால் உண்மையிலேயே சரியான நையாண்டி நக்கல் பிடித்தவர் மணிவண்ணன். அதுவும் சத்யராஜுடன் சேர்ந்துவிட்டால் இருவரும் செய்யும் அட்ராசிட்டியை யாராலும் தடுக்க முடியாது. இருவருமே ஆரம்பத்தில் இருந்து நல்ல நண்பர்கள்.

ஏன் சத்யராஜின் வளர்ச்சிக்கு மணிவண்ணனின் சில திரைப்படங்கள் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. சமீபகாலமாக சுந்தர் சியின் படைப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்று வருகின்றன. சுந்தர் சிக்கு குருவே மணிவண்ணன் தான். மணி வண்ணன் படங்களில் சுந்தர் சி உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். அப்படித்தான் அமைதிப்படை படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தாராம் சுந்தர் சி.

அதனால் அமைதிப்படை படத்தில் அமாவாசை கேரக்டரில் நடித்த சத்யராஜ் ஒரு காட்சியில் ஓடி போய் தேங்காயை பொறுக்குவார். அது எப்படி உருவானது என்பது பற்றி சுந்தர் சி கூறியிருக்கிறார். கேமிரா ரன் ஆகும். சத்யராஜ் சார் ஸ்பாட்டிலேயே கவுண்டர் அடிப்பாரு. பின்னாடி இருந்து யோசித்து யோசித்து மணிவண்ணன் டையலாக் சொல்வார். அப்படியே சத்யராஜ் சார் உள்வாங்கிட்டு எக்ஸ்பிரஷனோட நடிச்சிட்டு இருப்பாரு.

அமைதிப்படையில் அமாவாசை கேரக்டர் தேங்காய் பொறுக்குன சீன்லாம் அன்றைக்கு லொக்கேஷனில் வந்து அவர் எழுதியது. அந்த சீன் அவ்வளவு பெரிய ஹிட். இதெல்லாம் மாசக்கணக்கா ஒரு ரூம் போட்டோ அல்லது டிஸ்கஸ் பண்ணியோ எழுதியது கிடையாது என சுந்தர் சி கூறினார்.

Next Story