முன்னாள் கணவருடன் ஒரே ஹோட்டலில் நடிகை அமலாபால்...! ஷாக் கொடுத்த ஜோடிகள்..

ஒரு சின்ன பிரேக்குக்கு அப்புறம் நடிகை அமலாபால் நல்ல ரீஎன்ரி கொடுத்துள்ள படம் கடாவர். இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 3 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு நல்ல ஃபார்மிற்கு திரும்பியுள்ளார் நடிகை அமலாபால்.
ஆரம்ப காலங்களில் நடித்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றன. மைனா, தலைவா, போன்ற படங்கள் இவருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. திருமண பிரச்சினைகளுக்கு பிறகு இவருக்கு இருந்த அந்தஸ்தையே இழந்து விட்டார் என்று தான் கூற வேண்டும். மேலும் மிக தைரியமாக ஆடை என்ற படத்தில் நடித்தார்.
இதையும் படிங்கள் : அஜித் பைக் ரெய்டும் ஐடி ரெய்டும்!…ஏகே-61 படத்தின் பரிதாப நிலை!…லீக்கான ஷாக்கிங் நியூஸ்….
ஆனால் சரியான அளவில் போகவில்லை. சமீபத்தில் கூட பாலியல் தொல்லை கொடுப்பதாக முன்னாள் காதலன் மீது புகார் செய்திருந்தார் அமலாபால். இது ஒரு புறம் இருக்க ஜீன்ஸ் பட தயாரிப்பாளர் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் வில்லியாக கமிட் ஆகியுள்ளார் அமலாபால். இந்த படத்தின் சூட்டிங் லண்டனில் நடைபெறுகிறதாம்.
அதே வேளையில் ஏ.எல் .விஜய் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் படம் தயாராகி கொண்டிருக்கிறது. இந்த படமும் லண்டனில் சூட்டிங் நடைபெறுகிறதாம். இந்த இரண்டு படங்களுக்குமே லோக்கல் புரெடன்ஷன் வேலைகளை ஒரே நிறுவனம் தான் பார்க்கிறதாம். ஆகையால் இரண்டு பட நடிகர்களுக்கும் ஒரே ஹோட்டலில் அறை ஒதுக்கப்பட்டுள்ளதாம். அமலாபாலும் ஏ.எல்.விஜயும் நீண்ட நாள்களுக்கு பிறகு லண்டனில் சந்திக்கிற இடமாக இந்த ஹோட்டல் அமையும்.